செய்தி
பிரதியமைச்சர் முரளிதரனுடன் பொது வைபவங்களில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம்: பொன். செல்வராசா குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 04:31.15 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலரால் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தான் கலந்து கொள்ளும் அரசாங்க பொது வைபவங்களில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுடன் கலந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, திகதி அறிவிக்கப்பட்டு ஒரு வார காலததிற்குள் பட்டிருப்பு தொகுதியிலுள்ள இரண்டு பாடசாகைளில் புதிய கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் வைபவங்களில் கலந்து கொண்ட பிரதியமைச்சருடன், குறித்த இரண்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டதாகவும் இந்நிகழ்வுகளில் அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகைளை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. தமது கட்சியின் தலைமைப் பீடம் இதனை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரவிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன. செல்வராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படல் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட இதுவரை 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஏ.மனாஸ் கூறுகின்றார்

சுயேட்சைக் குழுவொன்றிற்கு தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமருக்கு எச்சரிக்கை கடிதமொன்று கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-10-2014, 08:25.40 AM ]
சகல பல்கலைக்கழக மாணவர்களின் கைவிரல் அடையாளங்களை கணனியில் பதிவு செய்யும் முறையொன்றை தயாரித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-10-2014, 08:20.37 AM ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
[ Monday, 20-10-2014, 08:13.42 AM ]
விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வது குறித்து 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த தீர்மானத்தை நீக்கியமையானது, இலங்கையின் மற்றும் சர்வதேச இருப்பு தொடர்பில் மிகவும் ஆபத்தான முடிவு என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
[ Monday, 20-10-2014, 08:06.05 AM ]
தோட்டத் தொழிலாளர் குடும்பங்க​ளுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
[ Monday, 20-10-2014, 07:56.38 AM ]
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவைப் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 20-10-2014 08:22:20 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ள 3 வயது சிறுவன் துப்பாக்கியை ஏந்தியடி பேசிய காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-10-2014 07:43:28 GMT ]
சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
[ Monday, 20-10-2014 05:37:10 GMT ]
சுல்தான் ஜோஹர் கிண்ண ஹொக்கி போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்றது.
[ Monday, 20-10-2014 06:04:54 GMT ]
சம்சுங் நிறுவனமானது Intel நிறுவனத்தின் Bay Trail எனும் நவீன Processor-னைக் கொண்ட Chromebook 2 இனை அறிமுகம் செய்துள்ளது.
[ Monday, 20-10-2014 01:34:20 GMT ]
கிருத்திகன், ஜெனனி, ரஜித், ஷாலினி சார்லஸ் ஆகியோர் நடிக்க, வி. கிரியேஷன்ஸ் தயாரித்த குறும்படம் இலவு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.