செய்தி
இறுதிப்போர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறதா அரசாங்கத் தரப்பு?
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 07:33.49 AM GMT ]
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் அந்தப் போர் பற்றிய சர்ச்சைகள் மட்டும் தொடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அவ்வப்போது வெளியாகின்ற புதிய புதிய ஒளிப்படங்கள், வீடியோ காட்சிகள், தகவல்கள் என்பன இறுதிப்போரின் பின்னால் மறைந்து போயுள்ள மர்மங்களை கொஞ்சமேனும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன.

இந்த இறுதிப்போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்கள் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிறைந்ததாக இருந்து வருவது தெளிவு.

இறுதிப்போரில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கையாக உள்ளதே. தவிர சரியான எண்ணிக்கை என்னவென்று எவராலும் கூறப்படவில்லை.

ஐநா நிபுணர் குழு அறிக்கை 10 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

ஐநா வின் இந்தப் புள்ளிவிபரம் அரசாங்கத்திற்கு இன்றுவரை சவாலானதாகவும் கடும் நெருக்கடி கொடுப்பதாகவும் இருந்து வருகிறது.

கடந்த வாரம் தியத்தலாவை இராணுவ முகாமில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தூதுவர்கள் இராஜதந்திரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

இங்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தகவல்களும், புள்ளிவிபரங்களும் முன்னுக்குப் பின் முரணானவையாக உள்ளன. இதில் முதலாவது போரின்போது படையினர் குற்றங்களில் ஈடுபட்டனரா என்ற விவகாரம் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவேயில்லை என்பது தான் அரசின் முன்னைய நிலைப்பாடாக இருந்து வந்தது.

ஆனால் இப்போது அவ்வாறு உறுதிபடக்கூறும் நிலையில் அரசாங்கம் இல்லை.

போரின்போது சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறியுள்ள கோத்தபாய ராஜபக்ச, அவ்வாறான எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் சில படையினர் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் செயற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்ற குற்றச்சாட்டை அவர் இப்போது முற்றிலுமாக நிராகரிக்கும் நிலையில் இல்லை.

முன்னர் எந்தப் போர்க்குற்றமும் நிகழவில்லை என்றே வாதிட்டு வந்த அவர் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் அதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பது அண்மைய மாற்றம்.

இதற்கு சனல்4 மற்றும்  பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான போர்க்குற்ற ஆதாரங்கள் அல்லது சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அமைந்திருக்கலாம்.

அத்துடன் படையினர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால், தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதற்கு இராணுவத்தில் வலுவான பொறிமுறைகள் உள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் சிறப்பு நீதிமன்றங்களை நியமித்துள்ளதாகவும், பொதுமக்கள் தாராளமாகத் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இந்த இராணுவ நீதிமன்றம் கிளிநொச்சிலிருந்தே விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் இந்த இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக சுமார் ஒருமாதம் கழித்தே, அதுவும் அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் வருகிறார்கள் என்றதும் தான் அரசாங்கம் அறிவித்தது.

அப்போது மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கிளிநொச்சிப் படைத்தலைமையகத் தளபதியாக இருந்தார்.

அதனால் கிளிநொச்சியிலேயே இராணுவ நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெறும் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் அவர் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சிப் படைத்தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா புதிய பதவிக்காக காத்திருக்கும் நிலையில் கிளிநொச்சியில் அவரின் கீழ் இயங்கிய இராணுவ நீதிமன்றத்தின் நிலை என்னவென்றோ அது தற்போது எங்கிருந்து செயற்படுகிறது என்றோ அதன் விசாரணைகள் எந்த நிலையில் உள்ளது என்றோ தகவல்கள் இல்லை.

கடற்படை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க கடற்படைத்தளபதியும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்தக்குழு அமைக்கப்பட்டது பற்றிய தகவல்கள் இப்போதுதான் முதன்முறையாக வெளியே தெரியவந்துள்ளன.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க கடற்படையும் ஒரு விசாரணைக்குழுவை அமைக்கும் என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தது.

ஆனால் அத்தகைய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர், கடற்படை தனியாக விசாரணை நீதிமன்றத்தை அமைக்காது என்றும், இராணுவ நீதிமன்றமே கடற்படை மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்றும் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்திருந்தார்.

இப்போது பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடற்படைத் தளபதியும் ஒரு விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் எது உண்மை எது பொய் என்ற குழப்பம் உள்ளது.

இந்தநிலையில் கடற்படை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவராவது முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய விரும்பினால் எங்கேபோய் முறையிடுவது என்று தெரியவில்லை.

போர் நடந்த போதும் சரி போர் முடிந்த பின்னரும் சரி பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்றே அரசாங்கம் கூறிவந்தது. கோத்தபாய ராஜபக்சவும் சரி, மகிந்த ராஜபக்சவும் சரி இந்த விடயத்தில் தெளிவாகவே இருந்தனர். போரில் ஒரு பொதுமகன் கூட படையினரால் கொல்லப்படவில்லை என்றே தெரிவித்தனர்.

ஆனால் தியத்தலாவையில் கோத்தபாய ராஜபக்ச அவ்வாறு அழுங்குப் பிடியாக நிற்கவில்லை.

படையினர் தனிப்பட்ட ரீதியாக போர்க்குற்றங்கள் செய்திருக்கலாம் என்று சூசகமாகச் சொல்லியுள்ளார்.

இது போர்க்குற்ற ஆதாரங்கள் பல வெளிப்பட்டதன் எதிரொலியாக இருக்கலாம்.

அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் படையினர் சிலர் தண்டிக்கப்படுவதற்கும் கூட வாய்ப்புக்கள் உள்ளன.

இது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்று கூறமுடியாது.

இப்போதைய நிலையில் சர்வதேச சமூகத்தைச்  சமாளிக்க இதுபொன்ற உத்திகள் தேவையென்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

போர்க்குற்றங்களே நடக்கவில்லை, போரில் பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்று கூறுவதை சர்வதேச சமூகம் நம்பாது என்ற உண்மை இப்போதாவது அரசாங்கத்திற்குப் புரிந்துள்ளது.

போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி முரண்பாடுகள் பல இருந்தாலும் வடக்கில் 2006 தொடக்கம் 2009 மே வரையில் 8 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் புலிகளே என்றும் கணக்கு காட்டியுள்ளார் கோத்தபாய.

அது மட்டுமன்றி போரில் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாத வகையில் போரை நடத்துவது என்ற கொள்கை உறுதியாக கடைப்பிடிக்கப் பட்டதாகவும் கூறுகிறார்.

அதேவேளை பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் போரை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அவரே சொல்கிறார்.

இதிலிருந்து போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் எந்தளவு இழப்புகள் ஏற்பட்டன என்பதில் தான சர்ச்சைகள் உள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைகள் நீண்டகாலத்துக்கு உறங்காது- உறக்கத்தில்- உறைநிலையில் வைத்திருக்க முடியாது என்பதை அரசதரப்பின் இந்தத் தளம்பலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சர்வதேசத்தின் இந்த நெருக்கடிகள் வெறும் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன் மட்டும் நின்றுபோகுமா? அல்லது குற்றங்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பது வரை தொடருமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சுபத்ரா

 

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 30-08-2014, 01:41.10 PM ]
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
[ Saturday, 30-08-2014, 01:28.11 PM ]

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

[ Saturday, 30-08-2014, 01:18.46 PM ]
வவுனியா மாவட்டத்தின் 29 கிராமங்களில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
[ Saturday, 30-08-2014, 12:19.26 PM ]
மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Saturday, 30-08-2014, 12:15.47 PM ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
[ Saturday, 30-08-2014 11:25:03 GMT ]
சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
[ Saturday, 30-08-2014 07:22:55 GMT ]
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 30-08-2014 10:10:40 GMT ]
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
[ Saturday, 30-08-2014 12:08:01 GMT ]
இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துக்கள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை.
[ Saturday, 30-08-2014 04:23:45 GMT ]
கவிமாறன் சிவா, சயன், கிருத்திகன், திலிப், கபில், சுதா, ப்ரியா ஆகியோர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் மானிடா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 30-08-2014 07:11:55 ]
ஒரு மாணவன் ஆகக் கூடியது 13 வருடங்களை பாடசாலை வாழ்க்கையில் செலவிடுகிறான்.