செய்தி
 Photo
பா.உ. சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து! சாரதி படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 10:36.23 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதுடன், முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை வைத்தியசாலை வீதியின் குறுக்கே நிறுத்தியிருந்த சாரதி மமதையில் முச்சக்கர வண்டி எச்சரிக்கை ஒலி எழுப்பியோதும் அசட்டை செய்து விட்டு நின்றுள்ளார்.

இதனால் ஒரு வழிப்பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கர வண்டி பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்துடன் பக்கவாட்டில் மோதியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி தலை மற்றும் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினரின் வாகனச்சாரதியை தாக்க முற்பட்டனர்.

எனினும் அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசயத்தை சமாளிக்கும் பாணியில் நடந்து கொண்டனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 27-05-2015, 07:23.34 AM ]
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரோந்திர மோடி கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
[ Wednesday, 27-05-2015, 07:10.31 AM ]
மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக சட்டத்தை சரியான முறையில் செயற்படுத்தி தண்டனை வழங்க ஜனாதிபதியோ, பிரதமரோ நடவடிக்கை எடுக்க போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-05-2015, 06:52.22 AM ]
இலங்கையின் இராஜதந்திர சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 27-05-2015, 06:38.29 AM ]
கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரழிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
[ Wednesday, 27-05-2015, 06:30.38 AM ]

சமூக சேவை உத்தியோகஸ்த்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று  காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[ Wednesday, 27-05-2015 06:29:45 GMT ]
துருக்கியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளதை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
[ Wednesday, 27-05-2015 06:47:35 GMT ]
ஜெயலலிதா விடுதலை ஆனதையொட்டி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தியுள்ளார்.
[ Wednesday, 27-05-2015 06:39:53 GMT ]
சென்னை அணியில் டோனியின் அணித்தலைவர் திறமை எனக்கு ஊக்கம் அளித்தது என்று மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-05-2015 05:36:51 GMT ]
சாதாரண கோப்பைகளினூடாக நீரை வெப்பமேற்றக்கூடிய புதிய தலைமுறை இலத்திரனியல் கேத்தலை (Kettle) MIITO எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 11:20:39 ]
ஜனவரி 8ஆம் திகதி வரை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்ட ஆணவ அதிகார தோரணை, சகோரதத்துவம் ஒற்றுமை, ஊழல் ,கொலை ,கொள்ளை குடும்ப ராஜசுபபோகம், அம்மம்மா ஓர் நாட்டின் தலைவரானால் இப்படியா இவ்வளவுமா என மக்கள் பார்த்துக்கொண்டிருந்த அந்த ராஜபக்சவின் கடந்த காலத்தை நாம் சற்று பின்நோக்கி பார்த்தோமேயானால்,