செய்தி
 Photo
ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் மர்ம நபர்கள்! விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் கெஹலிய
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 10:14.26 AM GMT ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடியில் நடைபெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது,

நேற்றைய நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அத்துடன் அந்த செய்தியாளர், ஐக்கிய தேசிய கட்சியினரால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் புலிக்கொடி ஏந்தியவாறு மர்ம நபர்கள் நடமாடியதை ஞாபகப்படுத்தினார்.

அந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 அதேபோன்று, நேற்று நடைபெற்ற புலிக்கொடி ஏந்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் அரசாங்கம் பாராமுகம் காண்பிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சற்றும் தாமதிக்காத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 'விசாரணை நடத்தப்படும் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு வேறு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 29-11-2015, 08:33.02 AM ]
வெலே சுதாவின் முக்கிய கூட்டாளிகளான போதைப்பொருள் வர்த்தகர்களின் வருமான வரி செலுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
[ Sunday, 29-11-2015, 08:19.32 AM ]
வடமாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளமை குறித்து அனந்தி சசிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-11-2015, 08:07.13 AM ]
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி இந்திய ஊழல் எதிர்ப்பு கட்சியான அரவிந் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மட்ட தலைவரான பிபுல் தேவை சந்தித்துள்ளார்.
[ Sunday, 29-11-2015, 07:54.43 AM ]
கணவர் குற்றமற்றவர் எனவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-11-2015, 07:35.26 AM ]
வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், 07 அத்தியாவசிய பொருட்களின் விலை மாத்திரமே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
[ Sunday, 29-11-2015 08:17:09 GMT ]
பிணையக்கைதிகளை கொலை செய்யும் காட்சிகள், தாங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளும் முறைகளை அவ்வப்போது வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வரும் ஐ.ஸ் தீவிரவாதிகள் தற்போது அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
[ Sunday, 29-11-2015 06:52:35 GMT ]
பெங்களூரில் கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலையால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாமியுள்ளன.
[ Sunday, 29-11-2015 06:59:59 GMT ]
தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற ‘போலோ’ விளையாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசரான ஹரி, எதிர்பாராத விதமாக குதிரையில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 29-11-2015 07:19:37 GMT ]
நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளையும் ஆரோக்கியம் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
(6ம் இணைப்பு)
[ Friday, 27-11-2015 15:24:17 ] []
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தேச விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மானமா வீரர்களுக்காக விடுதலைப் புலிகளால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நவம்பர் 27ம் நாளான மாவீரர் நாள் உலகின் பல பாகங்களிலும் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.