செய்தி
வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:28.22 PM GMT ]
அரசாங்கத்திற்கு எதிரான தாயகத்தின் கள யதார்த்தத்தை வெளியிட்டுவரும் இணைய ஊடகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில்,  உள்ளூர் ஊடகங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது.

கடந்த 11ம் திகதி யாழிலிருந்து வெளியாகும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.

இதேபோன்று வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரமும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

இதன்போது இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து பிரசுரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை பிரசுரித்தல் தொடர்பாக கேள்வியெழுப்பபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ்வாறான விசாரணைகளின் மூலம் அரசாங்கம், ஊடகங்களின் வாயை நிரந்தமாக மூடுவதற்கு முயற்சித்து வருகின்றமை புலனாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேசிய மட்டத்தில் வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் யாழ். பதிப்பில் வெளியாகும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அந்த பத்திரிகையின் தலைமையத்துடன் அரசாங்கம் முறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 06:02.43 PM ]
இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனையின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு என்ற 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
[ Tuesday, 28-04-2015, 05:58.02 PM ]
இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன்.
[ Tuesday, 28-04-2015, 04:23.07 PM ]
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடயின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015, 04:11.01 PM ]
புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 28-04-2015, 03:52.39 PM ]
யாழ்.மூளாய் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்திற்கு இலக்காகி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்
[ Tuesday, 28-04-2015 17:23:57 GMT ]
நேபாள நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 28-04-2015 12:06:22 GMT ]
திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய சீமான், விஜயகாந்தை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்க முடியாது என்று பேசியுள்ளார்.
[ Tuesday, 28-04-2015 11:11:48 GMT ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
[ Tuesday, 28-04-2015 13:33:44 GMT ]
இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.