செய்தி
 Photo
தமிழீழ இராச்சியத்தில் அமெரிக்கரும் - சிங்களரும்: சிங்கள ஊடகங்கள் கொந்தளிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 08:07.34 AM GMT ]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான உறுப்பினர்களை அறிவித்துள்ள நிலையில், தமிழீழ இராச்சியத்தில் அமெரிக்கரும் - சிங்களரும் என தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் கொந்தளித்துள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான ராம்சி கிளார்க் மற்றும் சிங்களக் குடிமகனான மனித உரிமைவாதியான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன உட்டப ஒன்பது பேர், நா.த.அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கையின் சிங்கள - ஆங்கில ஊடகங்கள் இச்செய்தியினை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.

சுதந்திர தமிழீழத்திற்கான வேட்கையினை சனாநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அரங்கில் உள்ள நிலையில், மேற்படி இருவரும் நா.த.அரசாங்கத்தின் மேற்சபையில் பங்கெடுத்துள்ளமையானது, தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டதாக கருத வேண்டியுள்ளதென சிங்கள ஊடகங்களின் அச்சத்தின் பின்னால் உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான ராம்சி கிளார்க், அமெரிக்கச் சட்டத்திலும் அனைத்துலகச் சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலன் என்று பெயரெடுத்தவர்.

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.

அனைத்துத் தமிழராலும் உற்றதோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.

சிங்களக் குடிமகனான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன அவர்கள் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத இலங்கை அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். இலங்கையின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர்.

சர்வதேச அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுப்பெற்று வருவது சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியாகவுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள மேற்சபை நியமனங்கள் இன்னுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என்பதன் வெளிப்பாடாகவே, சிங்கள ஊடகங்களின்  கொந்தளிப்பினை கவனிக்க முடியுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 17-09-2014, 05:10.17 AM ]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பென்ன எனுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 17-09-2014, 03:48.15 AM ]
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் கொலை செய்யப்பட்ட 17 தன்னார்வு தொண்டர்கள் தொடர்பான விசாரணைகளை,  தாம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 17-09-2014, 01:53.57 AM ]
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014, 01:47.47 AM ]
இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 17-09-2014, 01:37.37 AM ]
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014 04:05:44 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் மேலும் 24 பிணைக்கைதிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
[ Tuesday, 16-09-2014 11:48:01 GMT ]
திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014 03:13:12 GMT ]
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.
[ Wednesday, 17-09-2014 01:33:11 GMT ]
Lenovo நிறுவனம் Miix 3 எனும் புத்தம் புதிய விண்டோஸ் 8 டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
[ Tuesday, 16-09-2014 06:57:42 GMT ]
கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 17-09-2014 01:53:57 ]
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.