செய்தி
முள்ளியவளையில் இராணுவப் புலனாய்வாளர்கள் குடும்பஸ்தர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 12:25.00 PM GMT ]
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் குடும்பஸ்தர் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில், படுகாயமடைந்த நிலையில் அவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ப.கிரிதரன் (வயது40) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

குறித்த சம்பவத்தின்போது இவரது வீட்டிற்குள் வந்த இரு இனந்தெரியாத நபர்கள், பெயரை கூறி வீட்டின் வெளியே வருமாறு அழைத்துள்ளனர். இதன்போது அவர் வெளியே வந்ததும் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, அங்குவந்த உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதல் சம்வம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 01-12-2015, 10:58.24 AM ]
வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது அனைத்து ஆளும்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015, 10:51.49 AM ]
தமது முகாமுக்கு குண்டர்கள் தாக்குதல் மேற்கொள்வதாக மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
[ Tuesday, 01-12-2015, 10:27.48 AM ]
2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் மீதான விளக்கமறியல் மேலும் .இரு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது
[ Tuesday, 01-12-2015, 10:16.21 AM ]
இரத்மலான விமான நிலையத்தை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது சர்வதேச பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துமளவிற்கு பல மாற்றங்கள் செய்யவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015, 09:51.38 AM ]
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015 00:16:42 GMT ]
சீனாவில் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 01-12-2015 06:19:38 GMT ]
பருவ நிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி சூரிய சக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015 07:10:30 GMT ]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
[ Tuesday, 01-12-2015 09:09:03 GMT ]
மாசடைந்த சூழல், வெப்பம், தூசு பயன்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் கிரீம்களால் அதிகப்படியான நச்சுக்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 30-11-2015 13:46:21 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை