செய்தி
 Photo
கொக்கொஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கியது இலங்கை அகதிப் படகு: 4 பேர் நீந்திக் கரைசேர்ந்துள்ளனர்
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:33.58 AM GMT ]
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற அகதிப்படகொன்று கொக்கோஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கிக் கொண்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொக்கோஸ்தீவிலிருந்து 200 மீற்றல் தூரத்தில் இலங்கையிலிருந்து சென்ற 67 பயணிகளைக் கொண்ட படகு நேற்றுக் காலை 8 மணியளவில் கற்பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர். இவ்வாறு கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஜக் ஓ டோனல்ட் என்பவர், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.

கரையைச் சேர்ந்த நால்வரும், கொக்கோஸ் வாசியிடம், படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர். ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஏனைய புகலிடக் கொரிக்கையாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் சுகாதாரம் மற்றும் உடல்நிலைகளை அறிவதற்காக கொக்கோஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 28-03-2015, 10:36.39 AM ]
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Saturday, 28-03-2015, 10:30.39 AM ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான இரண்டாம் முறை வாசிப்பு மீதான விவாதம் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
[ Saturday, 28-03-2015, 10:16.49 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் 2 ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.
[ Saturday, 28-03-2015, 10:00.22 AM ]
யுக்ரெய்ன் அரசாங்கத்தின் இரண்டு முறைப்பாடுகளுக்கு இணங்க ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது
[ Saturday, 28-03-2015, 09:02.52 AM ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Saturday, 28-03-2015 10:33:12 GMT ]
உலகளவில் மிகச் சிறந்த தலைவர்களுக்கான பட்டியலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் முதலிடம் பிடித்துள்ளார்.
[ Saturday, 28-03-2015 08:42:03 GMT ]
லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 28-03-2015 05:29:27 GMT ]
உலகக்கிண்ண அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் போராடி வீழ்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.
[ Saturday, 28-03-2015 07:31:31 GMT ]
தினமும் 9 மணிநேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் நிச்சயம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 27-03-2015 13:35:10 ]
யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை.