செய்தி
இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 06:10.18 AM GMT ]
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நாளை புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும்.

இதில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை இழந்த தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென ஆனிராஜா கூறினார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 19-09-2014, 03:24.15 PM ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது 64 வது பிறந்த தினத்தை மிகவும் எளிமையாக கொண்டாடினார்.
[ Friday, 19-09-2014, 02:55.14 PM ]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் என்னைத் தாக்கி ஒரு செய்தி விட்டிருக்கின்றார். எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையினால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும்.....
[ Friday, 19-09-2014, 02:47.21 PM ]

அமைச்சர் ரிசாத் பதியூதீன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, கபே அமைப்பின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

[ Friday, 19-09-2014, 02:04.28 PM ]
ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஷ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
[ Friday, 19-09-2014, 01:39.24 PM ]
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து இலங்கை எதிர்கொண்ட பிரச்சினைகளை கையாள்வதற்காக அந்த நாடு அமைத்துவரும் விசேட நல்லிணக்க பணியகத்துக்கு ஐ.நா.விடம் உதவி கோரவில்லை என ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். 
[ Friday, 19-09-2014 09:05:12 GMT ]
ஈரான் நாட்டில் 6 இளைஞர்கள் பிரபல பாட்டு ஒன்றிற்கு நடனமாடி காணொளி எடுத்ததால் 6 மாதங்கள் சிறை தண்டனையும், 92 சவுக்கடிகளும் கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 19-09-2014 07:55:33 GMT ]
தமிழகத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் காங்கிரசை தாங்கி பிடிக்க, மாநில காங்கிரஸ் தலைவராக நடிகை நமீதா அல்லது சமீபத்தில் திருமணமான நடிகை நஸ்ரியா ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்கலாம் என்று கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Friday, 19-09-2014 11:06:30 GMT ]
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியில் அசத்திய மேக்ஸ்வெல், திசரா பெரராவுக்கு பஞ்சாப் அணித்தலைவர் பெய்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.
[ Friday, 19-09-2014 10:14:38 GMT ]
Notion Ink Cain எனும் புத்தம் புதிய விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினைக் கொண்ட டேப்லட் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
[ Friday, 19-09-2014 04:49:05 GMT ]
சமந்தாவின் திரையுலக கிராஃப் நாளுக்கு நாள் மேலே சென்று கொண்டே போகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 18-09-2014 06:49:44 ] []
சீனா ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் வரவேற்பு வைபவம் இலங்கையில் அரசியல் தலைவர்களின் உணர்வு உணர்ச்சி பொங்கியதாக (16ம், 17ஆம் திகதி பிற்பகல் வரை) இருந்தது.