செய்தி
(2ம் இணைப்பு)
 
அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்
[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 04:55.01 AM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தில்ரூக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியே  உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் இந்த இளைஞர் சிகி;ச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார் இந்தநிலையிலேயே மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்தமையை அடுத்தே அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிமலரூபன் என்ற இளைஞர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இரண்டாம் இணைப்பு

வவுனியா சிறைச்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிறிதொரு தமிழ் அரசியல் கைதி இன்று காலை
மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.

இன்று ராகம மருத்துவமனையில் மரணமானவர் 34 வயதான மரியதாஸ் நேவிஸ் தில்ருக்ஷன் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்  எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அரசியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட தினத்திலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஹர மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்ததை தொடர்ந்து அங்கிருந்ததமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியும் கடந்த மாதம் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமானமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 28-03-2015, 11:44.09 AM ]
இடம்பெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், தமிழனப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 28-03-2015, 11:15.33 AM ]
புதிய அமைச்சர்கள் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Saturday, 28-03-2015, 11:07.48 AM ]
100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடக்கும் தமது மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
[ Saturday, 28-03-2015, 10:52.27 AM ]
தேசிய நிறைவேற்றுச் சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறும் அந்த சபையின் கூட்டத்தின் போது தீர்மானிக்க உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
[ Saturday, 28-03-2015, 10:51.07 AM ]
சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஐயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
[ Saturday, 28-03-2015 11:48:37 GMT ]
அமெரிக்காவில் இரவு உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது திடீரென அங்கு ஏசுநாதர் தோன்றியதால் ஜோடி ஒன்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
[ Saturday, 28-03-2015 08:42:03 GMT ]
லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 28-03-2015 08:19:39 GMT ]
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன.
[ Saturday, 28-03-2015 11:57:53 GMT ]
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 27-03-2015 13:35:10 ]
யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை.