செய்தி
 Photo
உயிர்க் கொடை செய்த வீரத்தமிழ் மகன் விஜயராஜிக்கு பிரித்தானியாவில் வணக்க நிகழ்வு!
[ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 12:45.25 PM GMT ]
தீயில் சங்கமமாகி தமிழர்களுக்காய் தன் உயிர்க் கொடை செய்த வீரத்தமிழ்மகன் தங்கவேல் விஜயராஜிக்கு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று நடைபெற்றது.

வடமேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள புறோக்சைட் கொமியூனிட்டி சென்ரர் மண்டபத்தில் மாலை 7:00 மணி முதல் 9:00 மணிவரை பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் ஈகச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரனான கிருபா ஏற்றிவைத்தார். ஈகச்சுடர் விஜயராஜின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை மூன்று மாவீரர்களின் சகோதரனும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் பேணல் அமைச்சருமான சேகர் அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கமும், மலர் வணக்கமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நினைவுரைகளை தமிழகத்தைச் சேர்ந்த என். அரசு என்பவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான நிமலனும் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாறனும் நிகழ்த்தினர்.

அத்தோடு இந்நிகழ்வில் வீரத்தமிழ்மகன் தங்கவேல் விஜயராஜிக்கு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக விலைமதிப்பற்ற உயரிய உயிரை தீயிற்கு இரையாக்கும் போராட்டங்களை தவிர்த்து, உலகமே வியக்கும் விதத்தில் வெவ்வேறு வடிவங்களில் எம்முள் உள்ள ஆற்றலை வைத்து தமிழீழ விடுதலைப் போரை நடாத்துவோம் என உறுதி எடுக்கப்பட்டதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 28-11-2015, 02:25.08 PM ]
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் கோரியிருந்தார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 28-11-2015, 02:04.12 PM ]
உள்ளூராட்சி மன்ற மாகாண சபைகள் பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரணவிற்கு ஊடகப் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Saturday, 28-11-2015, 01:54.20 PM ]
இலங்கைப் பணிப்பெண் ஒருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்யும் சவுதி நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க வேண்டாம் என்று சவுதிக்கான தூதர் வலியுறுத்தியுள்ளார்.
[ Saturday, 28-11-2015, 01:11.44 PM ]
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீண் சிரமங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 28-11-2015, 01:10.44 PM ]
அவன்கார்ட் மோசடிகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையொன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 28-11-2015 12:35:15 GMT ]
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் மோத் மேன் (Moth man) எனப்படும் பூச்சி மனிதனை மக்கள் பலர் பார்த்துள்ளனர்.
[ Saturday, 28-11-2015 07:20:58 GMT ]
சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்த போதும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என மேயர் சைதை துரைசாமி பேசியுள்ளார்.
[ Saturday, 28-11-2015 10:17:38 GMT ]
ரெஸ்ட்லிங் போட்டிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பல விடயங்கள் ரசிகர்களுக்கு வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
[ Saturday, 28-11-2015 07:47:58 GMT ]
இயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய கொடையான தேன் உடலில் ஏற்படும் பல வித நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
(6ம் இணைப்பு)
[ Friday, 27-11-2015 15:24:17 ] []
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தேச விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மானமா வீரர்களுக்காக விடுதலைப் புலிகளால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நவம்பர் 27ம் நாளான மாவீரர் நாள் உலகின் பல பாகங்களிலும் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.