International
Notification
Notification
Submit Cancel

பல்கலை. ஆசிரியர்கள், மாணவர்களின் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆரம்பம்

advertisement

இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வெற்றிகொள்வதற்கு அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி  பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்தும் காலியிலிருந்தும் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.

காலி துறைமுகத்திலிருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டப் பேரணியும் ஆரம்பமாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்காதே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கு போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமான இந்த இரு எதிர்ப்பு பேரணிகளும் எதிர்வரும் 28ம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement