செய்தி
சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் கல்லால் எறிந்து கொலை!- வவுனியாவில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 05:00.23 AM GMT ]
மதுபோதையில் சென்ற இரு இளைஞர்களுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வவுனியா, ஓயா சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் எஸ். கந்தராஜா (வயது55)  என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்நாள் இரவு மதுபோதையில் குறித்த கடைக்குச் சென்ற இரு இளைஞர்களும் சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.

இவர்கள் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் போல் தோற்றமளித்ததாலும் மதுபோதையில் இருந்ததாலும் சிகரெட் வழங்க கடை உரிமையாளர் மறுத்துள்ளார்.

இதனால் அவர்கள் கற்களால் குறித்த கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 05-10-2015, 01:12.07 AM ]
ஜெனீவா யோசனை முழுமையாக அமுல்செய்யப்படும் என்று அரசாங்க அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Monday, 05-10-2015, 01:04.10 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைப்பு அமைச்சராக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 05-10-2015, 12:59.31 AM ]
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போன்ற தேசிய அரசாங்கத்திலும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
[ Monday, 05-10-2015, 12:51.59 AM ]
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ளது.
[ Monday, 05-10-2015, 12:38.52 AM ]
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நீதிகிடைக்க வேண்டுமாயின் அது சர்வதேச விசாரணையின் மூலமே கிடைக்க முடியும்.இல்லையெனில் உண்மைகள் மறைக்கப்படக்கூடும்.
[ Monday, 05-10-2015 00:25:33 GMT ]
அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர்.
[ Sunday, 04-10-2015 16:54:43 GMT ]
திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் நாமக்கு நாமே பயணம் மிகவும் கொமடியா உள்ளத என்று முக அழகிரி கூறியுள்ளார்.
[ Sunday, 04-10-2015 13:27:53 GMT ]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் தலைவராக திரிமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015 14:30:15 GMT ]
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.