செய்தி
தமிழக மீனவர் ஒருவர் இலங்கைச் சிறையில் உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 07:38.49 AM GMT ]

இலங்கைக் கடல் எல்லையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நேற்று உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த 8 ஆண்டுகளாக இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2004ம் ஆண்டு மண்டபம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் போதைப் பொருட்களை கடத்தியதாக இராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்களில் 62 வயதான தங்கராசு என்பவர் நேற்று உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கு காரணம், மாரடைப்பு என்று கூறப்பட்டுள்ளது.

அவரது உடலைக் கொண்டு வரும்படி, தங்கராசுவின் உறவினர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை தமிழகம் கொண்டு வர கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடுகளைச் செய்வதாக தெரியவருகிறது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 09-02-2016, 09:30.29 AM ]
பெண் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற சட்டமூலத்தை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[ Tuesday, 09-02-2016, 09:21.32 AM ]
சமுர்த்தி செயல்திட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு இவ்வதிகாரிகளை தரம் குறைவாக பேசியதாக பிரதி அமைச்சர் அஜித் சி. பெரேராவுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் 300ற்கு மேற்பட்டவர்கள் நுவரெலியா நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[ Tuesday, 09-02-2016, 09:20.21 AM ]
பாடசாலை மாணவர்கள்  6 பேரை பாலியல் துஸ்பிரோயகத்திற்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 09-02-2016, 09:11.28 AM ]
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.
[ Tuesday, 09-02-2016, 08:48.09 AM ]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக்கருத்து இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் ஹுசைன் தம்மிடம் தெரிவித்தார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 09-02-2016 08:53:58 GMT ]
அர்ஜெண்டினாவில் 97 வயது மூதாட்டியை பாதுகாப்பு பொறுப்பாளர் ஒருவர் மோசமாக தாக்கும் காட்சியை அம்மூதாட்டியின் மகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
[ Tuesday, 09-02-2016 05:24:34 GMT ]
தி.மு.க. ஒரு மூழ்கும் கப்பல், அதில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார்.
[ Tuesday, 09-02-2016 05:59:15 GMT ]
ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
[ Tuesday, 09-02-2016 06:48:23 GMT ]
பெண்களுக்கு அழகே கருகருவென இருக்கும் தலைமுடிதான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.