செய்தி
 Photo
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 05:46.36 AM GMT ]
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்விற்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினருமாகிய ராம்கே கிளார்க் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு கனடாவில் இருந்து சென்ற இசைக் குழுவினர்களினால் சிறந்த இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தனர். அதில் அமெரிக்காவில் இருக்கும் இளம் தமிழ் பாடகர்களும் கனடாவில் இருந்து வருகை தந்த இளம் பாடகர்களும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.

இந் நிகழ்விற்கான செலவினங்களை நியூயோர்க் நகர தமிழ் வர்த்தகர்கள் பொறுப்பேற்றது மாத்திரமன்றி, இந் நிகழ்வின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்காக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ அரசாங்கத்திற்கு உறுதுணையாக பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 02-07-2015, 07:07.57 AM ]
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Thursday, 02-07-2015, 06:58.08 AM ]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 32 தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத்  உள்ளிட்ட கிழக்கு மாகாண உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Thursday, 02-07-2015, 06:56.17 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய கூட்டணி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 02-07-2015, 06:32.36 AM ]
நுவரெலியா மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பருவ வயது பெண் பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளதாக காவற்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
[ Thursday, 02-07-2015, 06:20.07 AM ]
மக்களால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச எதனை கூறினாலும் அதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த சேதமும் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015 16:18:57 GMT ]
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது.
[ Thursday, 02-07-2015 07:11:52 GMT ]
சிறுநீரக தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
[ Thursday, 02-07-2015 07:34:56 GMT ]
இந்திய அணியில் அணித்தலைவராவது ரொம்ப எளிதாகிவிட்டது என்று முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கூறியுள்ளார்.
[ Wednesday, 01-07-2015 15:12:04 GMT ]
முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 01-07-2015 06:57:16 ] []
சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.