செய்தி
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு இன்னும் இலங்கையில் செயற்படுகிறது
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 10:16.29 AM GMT ]
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டிருப்பதாக த ஏசியன் ஏஜ்.பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இந்திய இராணுவத் தகவல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்றுடன் பாகிஸ்தான் தீவிரவாதப்படையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, த ஏசியன் ஏஜ்; இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் கடந்த 2004ம் ஆண்டு பசீர் வாலி மொஹமட் என்ற முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவரை இலங்கைக்கான தமது உயர்ஸ்தானிகராக நியமித்தது.

அவர் இலங்கையில் செயற்பட்டு, தென்னிந்திய செயற்பாடுகள் குறித்து நிரந்தரமாக அவதானிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றே இந்த நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் நியமிக்கப்பட்ட சில மாதங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இவரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

எனினும் சம்பவத்தில் அவரது பாதுகாவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் 7 பேர் கொல்லப்பட்ட போதும் அவர் உயிர்தப்பினார்.

முன்னாள் பாகிஸ்தானிய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இலங்கையில் இருந்து தென்னிந்திய செயற்பாடுகளை அவதானிக்கும் பொருட்டே வாலி மொஹமட்டை இலங்கைக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது.

அண்மையில் இந்திய இராணுவ தகவல்களுடன் தப்பி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தம்மிடம் உள்ள தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்திடம் வழங்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஏ. யின் தென்னிந்திய மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையை மையப்படுத்தி இன்னும் தொடர்கிறது என்பது உறுதியாகி இருப்பதாக, த ஏசியன் ஏஜ் தெரிவித்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 21-09-2014, 07:40.29 AM ]
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக இந்திய மனித உரிமை ஆர்வலரான அவ்டாஸ் கௌஷால் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014, 07:34.21 AM ]
ஊவா மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் கட்டியெழுப்பிய மாயைகள் தேர்தல் முடிவுகளுடன் உடைதெறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014, 07:26.03 AM ]
ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் விசாரணையைக் ஏற்கவே முடியாது என்ற இறுமாப்புடன் பேசிவருகிற ராஜபக்சவை, ஐ.நா. மன்றம் தனது ஆண்டு பொது அவைக் கூட்டத்தில் உரையாற்ற அனுமதித்திருப்பது தமிழினத்தை கொந்தளிக்க வைக்கிறது என தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014, 07:13.28 AM ]
சுமார் 23 மணித்தியாலப் பயணத் திட்டமிடலுடன், இலங்கை வந்திருந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், திட்டமிட்டதை விட ஒரு சில மணிநேரங்கள் அதிகமாகவே இலங்கையில் தங்கியிருந்த போதிலும், எதிர்பார்த்ததையும் விட அதிகமாகவே, இலங்கையுடன் உறவுகளைப் பலப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்.
[ Sunday, 21-09-2014, 07:06.04 AM ]
அடுத்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அடுத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
[ Sunday, 21-09-2014 07:51:06 GMT ]
கடந்த வாரம் உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட கோர்வை,
[ Sunday, 21-09-2014 06:01:57 GMT ]
ஏர் இந்தியா ஊழியர்கள் பார்ட்டியில் நடனம் ஆடிய கானொளி தற்போது வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 20-09-2014 15:54:39 GMT ]
சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த டொல்பின்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்காட்சர்ஸ் அணியும் மோதின.
[ Saturday, 20-09-2014 13:37:04 GMT ]
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
[ Sunday, 21-09-2014 01:34:51 GMT ]
தமிழ் சினிமா ரசிகர்களின் அனைவரின் பார்வையும் தற்போது ஐ படத்தின் மீது தான் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 21-09-2014 03:40:40 ]
அண்மைய நாட்களாக இந்திய ஊடகங்களில் மிகப் பரபரப்பான செய்தியாக மாறியிருப்பவர் அருண் செல்வராஜன் என்ற இலங்கை இளைஞர்.