செய்தி
பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 11:08.52 AM GMT ]

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் பதிவு பிரதியை  பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,

அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.

விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் சமாதானம் பேசிவருகின்றனர்.

தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 05-05-2015, 09:52.32 AM ]
முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ பொலிஸ் நிதி மோசடி பிரிவி‍னரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 09:34.53 AM ]
வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களினால் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன
[ Tuesday, 05-05-2015, 09:26.46 AM ]
இலங்கையில் வாழும் வாழும் 32 லட்சம் தமிழர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும். இலங்கைத்தீவில், தமிழர்களுடன் 18லட்சம் முஸ்லிம்களும், 150லட்சம் சிங்களவர்களும், பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றார்கள்.
[ Tuesday, 05-05-2015, 09:03.41 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின், சீதாவாக்கை பிரதேச சபையின் உறுப்பினர் கயான் துமிந்த தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 08:38.21 AM ]
இலங்கைக்கு கடல்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதி பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015 07:41:57 GMT ]
ஏமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தை சவுதி அரேபியா தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 05-05-2015 07:47:31 GMT ]
உத்தரபிரதேசத்தில் காதல் ஜோடிகள் மரம் ஒன்றில் துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 05-05-2015 06:43:28 GMT ]
சென்னை அணித்தலைவர் டோனியின் தலைமை தான் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சகவீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015 08:15:22 GMT ]
பெண்களை போன்று ஆண்களும் தங்களது முக அழகு, ஆடை அழகு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 03-05-2015 20:59:20 ]
பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது.