செய்தி
அழுத்தங்களினால் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றார்! பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்- ஐ.தே.க.
[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 12:36.32 AM GMT ]
மோ்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றமைக்கு சில தரப்புகளிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமா என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கேள்வி எழுப்பியது.

இராணுவ மேஜரின் வழக்குரைஞர் வழக்கை வாபஸ்பெற்றுள்ளதாகவும் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளதாக தென்படுவதாகவும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி அதிகாரி ஒருவரும் இதேபோன்று முறைப்பாட்டை வாபஸ்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சுட்டிக்காட்டினார்.

சமுர்த்தி அதிகாரியின் நிலைக்கு இராணுவ அதிகாரியும் இறங்கிவிட்டாரா என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என அவர் கூறினார்.

அத்துடன், முப்படை பதவி உயர்வுகளிலும் அரசியல் நட்பே ஆதிக்கம் செலுத்துகின்றது. திறமை சேவைக்காலம் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. தம்முடன் நட்பாக இருக்கும் போதே தளபதியாக நியமிக்கப்படுகின்றார்கள்.

போதைவஸ்து வியாபாரிகளும் பாதாள குழுக்களுமே நாட்டை நிர்வகிக்கின்றனர் என்று ஐ.தே.க. எம்.பியான அஜித் பி. பெரேரா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மேஜரான சந்தன பிரதீப் சுசேன என்பவரை இராணுவ சேவையிலிருந்து உடனடியாக நீக்கி விடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 26-12-2014, 04:19.41 AM ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது பற்றி நிறுத்திட்டமாகக் கூறமுடியாத அளவில் நிலைமை உள்ளது.

[ Friday, 26-12-2014, 04:04.58 AM ]
பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஊடக விவகார ஆலோசகருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 26-12-2014, 03:56.35 AM ]

யாழ்ப்பாணம், தென்மராட்சி,  சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ ட்ரக் வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

[ Friday, 26-12-2014, 03:44.47 AM ]
ரணில் - மைத்­திரி ஒப்­பந்தம் போலி­யா­னது எனில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­ய­ல­மைப்பின் 13 வது திருத்த சட்டம் தொடர்­பி­லான தனது உண்­மை­யான நிலைப்­பாட்டை நாட்­டிற்கு வெளி­யிட வேண்டும் என  தேசிய சுதந்­திர முன்­னணி தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச சவால்­ வி­டுத்துள்ளார்.
[ Friday, 26-12-2014, 03:36.13 AM ]

நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஒருவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

[ Friday, 26-12-2014 04:01:57 GMT ]
சீனாவில் பெண்களின் உள்ளாடைகளை திருடும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  
[ Thursday, 25-12-2014 13:27:07 GMT ]
டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 40 சிறுவர்கள் மற்றும் 4 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Friday, 26-12-2014 03:17:35 GMT ]
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Thursday, 25-12-2014 11:44:18 GMT ]
ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
[ Thursday, 25-12-2014 04:20:07 GMT ]
விக்ரம் பிரபு தான் இந்த வருடத்தின் ஸ்டார் ஹீரோ போல. சிகரம் தொடு, அரிமா நம்பி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, ஹாட்ரிக் ஹிட்டிற்கு ரெடியாகிய படம் தான் வெள்ளகாரத்துறை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 25-12-2014 23:49:13 ]
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெற்றாலும் 2016 நவம்பர் மாதம் வரையும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தரின் ஆட்சிக் காலம் உள்ளது.