செய்தி
வடக்கில் மாகாண சபை இன்றி, திவிநெகும திட்டத்தை அமுலாக்க முடியாது
[ செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012, 02:13.25 AM GMT ]

வடமாகாணத்தில் மாகாண சபை அமைக்கப்படாத நிலையில், திவி நெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முக்கிய சட்டத்தரணி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கையில் வடக்கிலும் மாகாணம் என்ற ஒன்று இருக்கின்ற நிலையில், அதன் மாகாண சபையில் இந்த சட்ட மூலத்துக்கு அனுமதி பெறுவது முக்கியமானதாக காணப்படுகிறது.

இந்த நிலையில், வடமாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக, வடமாகாண ஆளுனரின் தன்னிச்சையான அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா, அல்லது அரசியல் காரணங்களுக்காக வடக்கில் உடனடியாக அரசாங்கம் தேர்தல் நடத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 01-09-2015, 05:45.22 AM ]
இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 01-09-2015, 05:41.42 AM ]
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
[ Tuesday, 01-09-2015, 05:30.29 AM ]
தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணசபையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
[ Tuesday, 01-09-2015, 04:36.04 AM ]
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 01-09-2015, 04:22.27 AM ]
மன்னார் மாவட்ட காணாமல்போனோர் சங்கத்தின் தலைவி இமானுவேல் உதயசந்திராவின் நான்கு பிள்ளைகளில் ஒரு மகன், இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல்போய் 8 வருடங்கள் ஆகியுள்ளன.
[ Tuesday, 01-09-2015 00:16:43 GMT ]
உளவு பார்த்ததாக குற்றங்சாட்டப்பட்ட ஈராக்கை சேர்ந்த 4 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 01-09-2015 05:41:02 GMT ]
மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில், உணவுக்காக விவசாயியைக் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 31-08-2015 13:33:39 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
[ Monday, 31-08-2015 13:47:44 GMT ]
உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 30-08-2015 21:47:24 ]
பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.