செய்தி
 Video
ஐ.நா. பொறுப்பு தவறியது: குற்றத்தை ஏற்றுக் கொண்டார் பான் கீ மூன்
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 02:37.34 AM GMT ]

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பில் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமது உள்ள குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 04-09-2015, 02:22.54 PM ]
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒன்று தனக்கு கிடைக்கும் என தான் முதலில் அறிந்திருக்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
[ Friday, 04-09-2015, 02:08.03 PM ]
நியாயம் கிடைக்க வேண்டுமெனில், சர்வதேச விசாரணையே நடைபெற வேண்டும். சரித்திர ரீதியில் பார்த்தால், இலங்கையில் இடம்பெற்ற எந்தவொரு உள்ளக விசாரணையும் முழுமையான முடிவிற்கு வரவில்லை என்கிறார் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்.
[ Friday, 04-09-2015, 01:27.18 PM ]
பொது மன்னிப்பு வழங்கப்படும் சரணடையுமாறு கூறியபடியால் இராணுவத்திடம் தனது கணவரை ஒப்படைத்துவிட்டு, நிர்க்கதியான நிலையில் உள்ளார் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய்.
[ Friday, 04-09-2015, 12:53.24 PM ]
யாழ் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன கொலை வழக்கில் எதிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 04-09-2015, 12:39.56 PM ]
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டதை கொண்டாடும் முகமாகவும் அவருக்கு ஆரோக்கியமான நல்லாசியும் வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகமான இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
[ Friday, 04-09-2015 14:09:24 GMT ]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஒருவர், செக்ஸ் அடிமை சந்தைகளில் பெண்கள் எவ்வாறு விற்கப்படுகிறார்கள் என்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
[ Friday, 04-09-2015 09:12:56 GMT ]
ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுடன் இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகின்றார்.
[ Friday, 04-09-2015 11:04:29 GMT ]
இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
[ Friday, 04-09-2015 08:01:03 GMT ]
தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.