செய்தி
ஐநாவின் இரகசிய அறிக்கை: முக்கிய பகுதிகள் பல கறுப்பு மையினால் அழிப்பு! (அறிக்கை இணைப்பு)
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 07:32.04 AM GMT ]

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

128 பக்கங்களைக் கொண்ட இந்த இரகசிய அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், ஐநா தனது பொறுப்பிலிருந்து தவறியமை குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், யுத்த வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், மிகமோசமாக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பயந்தே இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் இரகசிய அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 04-07-2015, 11:42.35 PM ]
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிராம மட்டத்திலான அரச நிர்வாகத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் 11 பேரை இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமின் பயிற்சிக்காக அதிகாரிகள் அனுப்பியிருக்கின்றனர்.
[ Saturday, 04-07-2015, 09:44.26 PM ]
தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவராக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியான ஜேம்ஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Saturday, 04-07-2015, 07:42.42 PM ]

யாழ். இணுவில் பகுதியில்  துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Saturday, 04-07-2015, 06:35.22 PM ]
பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 04-07-2015, 04:58.27 PM ]
பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 04-07-2015 16:17:46 GMT ]
புளோரிடாவில் தனது பள்ளித்தோழியினை நீதிபதியாக பார்த்த குற்றவாளி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 04-07-2015 14:21:44 GMT ]
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அண்ணணும், தங்கையும் காதல் திருமணம் புரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 04-07-2015 07:45:58 GMT ]
நாட்வெஸ்ட் டி20 போட்டியின் நேற்யை ஆட்டத்தில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணியுடன் மோதியது.
[ Saturday, 04-07-2015 13:29:44 GMT ]
அடிக்கடி தலைசுற்றலால் அவதிப்படுபவர்கள் இயற்கை வைத்தியங்களை மேற்கொள்வது நல்லது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 03-07-2015 22:25:29 ]
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் சிதைந்து சிதறப்போவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.