செய்தி
 Video
ஐ.நாவின் இரகசிய அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் அழித்தமை சரியானதே! - ஐ.நாவின் உயரதிகாரி
[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 10:33.46 PM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்தமையை சரி என்கிறார் ஐ.நா அமைப்பின் உயரதிகாரி ஒருவர்.

ஐ.நா. அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி
ஐநாவின் இரகசிய அறிக்கை: முக்கிய பகுதிகள் பல கறுப்பு மையினால் அழிப்பு!

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 04-05-2015, 12:45.26 PM ]
அமைச்சு பதவிகளை கைவிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவியை கைவிட தான் தயாராக இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாக அவரை மேற்கோள்காட்டி கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 04-05-2015, 12:42.39 PM ]
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்து பலதரப்புடனும் சந்தித்துப் பேசியுள்ளார்.
[ Monday, 04-05-2015, 12:40.21 PM ]
தனியார் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு, வழங்கும் மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் வைத்திய உபகரணங்களின் விலைகளை குறிப்பிட்டு கட்டணப்பட்டியல் விநியோகிக்கப்படவேண்டும் என நுகர்வோர் அதிகார சபை, தனியார் வைத்திய நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.
[ Monday, 04-05-2015, 12:36.57 PM ]
ஹொரணை, தம்பர கொஸ்வத்த என்ற பிரதேசத்தில் வயிற்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு முன்னாள் இராணுவ வீரரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 04-05-2015, 12:34.05 PM ]
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Monday, 04-05-2015 13:03:41 GMT ]
எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 04-05-2015 10:58:56 GMT ]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள தொழிற்கல்விக்கான நுழைவு தேர்வில், பசுமாட்டுக்கு தேர்வு எழுத அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 04-05-2015 10:36:03 GMT ]
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
[ Monday, 04-05-2015 08:05:23 GMT ]
உடலில் வெண்மை படலம் படருவது ஆபத்தான ஒன்றாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 03-05-2015 20:59:20 ]
பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது.