செய்தி
உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடும் அதிகாரம் பொது நலவாய நாடுகள் அமைப்புக்கு இல்லை! வசந்த பண்டார
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:25.51 AM GMT ]
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடும் அதிகாரம் பொது நலவாய நாடுகள் அமைப்புக்கு கிடையாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

பிரதம நீதியரசரின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொது நலவாய அமைப்பு தலையிட வேண்டுமெனக் கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் அரசியலமைப்பே இறையாண்மை கொண்டது. அதற்கமையவே நாம் செயற்பட வேண்டும். எனவே அரசியலமைப்பை பாதுகாப்போம் என சத்தியப் பிரமாணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மீறமுடியாது.

ஆனால் இன்று பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்பட்ட அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பான தெரிவுக்குழு அறிக்கை தொடர்பில் பிரச்சினை தோன்றியுள்ளது,

அதைவிடுத்து இவ்விடயத்தில் பொது நலவாய அமைப்பு தலையிடுவதற்கான அதிகாரம் கிடையாது. அதேவேளை இப்பிரச்சினையில் பொது நலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் தலையிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

இது அரசிலமைப்பை மீறிய செயலாகும். எனவே அரசியலமைப்பை மீறிய இப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு பிரதம நீதியரசர் வெளியேறியதும் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேறியமை பாராளுமன்றத்தின் உயர் தன்மையை, கௌரவத்தை அவமதித்த நடவடிக்கையாகும்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தெரிவுக்குழுவில் தொடர்ந்தும் பங்குபற்றி தமது பக்க கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டும். அத்துடன் தமது பக்க நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.

அதைவிடுத்து தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறியமை பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

எனவே இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக சபாநாயகர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 02:23.47 AM ]

குவைத் சென்ற இலங்கைப் பணிப் பெண்கள் பலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 02:17.47 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013, 02:15.24 AM ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது.

[ Sunday, 26-05-2013, 02:13.44 AM ]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

[ Sunday, 26-05-2013, 01:51.10 AM ]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

[ Sunday, 26-05-2013 02:00:40 GMT ]
ஜப்பானில் 6 மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் ஷின்சோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்காக அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Sunday, 26-05-2013 01:25:57 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.