செய்தி
 Photo
"நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு" திரு. இராசையா நவநாயகம் அவர்கள்!- தமிழீழ விடுதலைப் புலிகள்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:37.15 AM GMT ]
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவராயிருந்து, எமது போராட்டத்தை வளர்த்தெடுக்க அரும்பணியாற்றிய திரு.இராசையா நவநாயகம் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.

பிரித்தானியாவில் 1984ம் ஆண்டில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராகப் பணி செய்ய ஆரம்பித்த திரு. இராசையா நவநாயகம் அவர்கள் 1985ம் ஆண்டிலிருந்து 1992ம் ஆண்டு வரை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

தனது பணிக்காலத்தில் 1990ம் ஆண்டு பிரித்தானியாவில் முதன்முதலாக மாவீரர் நாள் நிகழ்வை ஒழுங்குபடுத்தி உணர்வெழுச்சியுடன் அதை நடாத்துவித்தார்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 1986ம் ஆண்டு பிரித்தானியாவில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1992ஆம் ஆண்டு வரை அதன் பொறுப்பாளராக இருந்து அதன் பணிகளை மேம்படுத்தக் கடுமையாக உழைத்தார்.

திரு. இராசையா நவநாயகம் அவர்கள் 1986ல் வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராவார்.

வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கத்தில் தலைவர் உட்படப் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று அதன் வளர்ச்சிக்காக உழைத்த இவரை வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கம் தனது வெள்ளிவிழாவின் போது “வோல்தம்ஸ்ரோ தமிழ் மக்களின் தந்தை” என்று மதிப்பளித்துச் சிறப்பித்தது.

இவர் தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவில் ஒரு பணியாளனாகப் பல்லாண்டு காலம் சேவை மனப்பாங்குடன் பணி செய்தார்.

தன் குடும்பத்தை விடவும் தான் பிறந்த இனத்துக்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டவரும் தமிழ்த் தேசியத்தையும் தேசியத்தலைவர் அவர்களையும் விழிமூடும் வரை பெருவிருப்போடு நேசித்த ஒரு சமூகசேவையாளனாகத் தமிழ்த் தேசியப் பணியில் அயராது உழைத்தவருமான திரு.இராசையா நவநாயகம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:43.41 PM ]
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:35.09 PM ]
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டிருந்து தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.  
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 20:33:05 GMT ]
கடவுளின் கருணையால் வெள்ளத்தில் இருந்து மீண்டேன் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.