குறித்த இராணுவச் சிப்பாயை எதிர்வம் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதவான் ருவான்திக்கா மாரபன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் ரனசேவா இராணுவ முகாமிற்கு அருகாமையில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
20 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய், நீண்டகாலமாக சீருடையில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.