செய்தி
இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புதல்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:45.39 AM GMT ]

இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் இவ்வாறு தாம் பயிற்சி பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலா வீசா மூலம் தமிழகத்திற்கு சென்று பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் தலைமுறைப் படைப் பிரிவு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவதாக ரிவிர சிங்கள பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழகத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பயணச் செலவுகள் ஆகியன அனைத்தையும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த இரண்டு மாணவர்களைத் தவிர வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஆயுதப் பயிற்சி பெற்றக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 31-03-2015, 09:19.02 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
[ Tuesday, 31-03-2015, 09:16.53 AM ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியும்ää ஜே.வி.பி கட்சியும் நெடுந்தொடர் ஒன்றை நடித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
[ Tuesday, 31-03-2015, 08:43.00 AM ]
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
[ Tuesday, 31-03-2015, 08:32.44 AM ]
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீபினின் வாகனம் இன்று அதிகாலை  இனம்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 31-03-2015, 08:12.29 AM ]
தாயகம், தேசியம், சுயர்நிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் என அவைத் தலைவா சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்
[ Tuesday, 31-03-2015 07:33:21 GMT ]
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கி விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 06:40:15 GMT ]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:39:13 GMT ]
இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
[ Tuesday, 31-03-2015 07:28:30 GMT ]
உலகளவில் பெரும்பாலான அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸ் என்றால் அது பிராய்லர் சிக்கன் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:34:44 ] []
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்..