குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை ஒரு தலைப்பட்சமானது, இந்த அறிக்கை முழுமை பெறவில்லை. இதனால் இந்த அறிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு முதல் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை வரையில் சகல நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் அமைந்துள்ளது.
தமது பக்க நியாயங்களை விளக்குவதற்கு அரசாங்கம், பிரதம நீதியரசருக்கு போதியளவு கால அவகாசத்தை வழங்கத் தவறியுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கே நம்பிக்கை கிடையாது. இதன் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நிறுவி அதன் மூலம் ஆராய ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார்.
எனவே, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரிக்கின்றது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.