செய்தி
அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை: பொதுபலசேனா
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:58.34 AM GMT ]

அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பௌத்த மக்கள் செறிந்து வாழும் இலங்கையில், பௌத்தர்களுக்கு முக்கியமான பௌர்ணமி தினங்கள் இதுவரை காலமும் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், 2013ம் ஆண்டு அரச நாட்காட்டிகளில் பௌர்ணமி தினங்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு ஊடக அறிக்கை மூலம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும், ஏனைய மதங்களுக்கு முக்கியமான தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தைப்பொங்கல், ரமழான் பண்டிகை, நபிகள் பிறந்த தினம், ஹஜ் பெருநாள், கிறிஸ்மஸ் பண்டிகை போன்ற வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளது.

பெரும்பான்மை பௌத்த மக்களின் முக்கிய நாட்களுக்கு வர்த்தக விடுமுறை வழங்காது, ஏனைய மதத்தவரின் முக்கிய நாட்களுக்கு எவ்வாறு வர்த்தக விடுமுறை வழங்குவது என பொதுபல சேனா அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 31-03-2015, 06:13.09 AM ]
கண்டி தவுலகல பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 06:12.00 AM ]
குருக்கள்மடம் மனித புதை குழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியால் கட்டளை பிறப்பித்தார்.
[ Tuesday, 31-03-2015, 05:57.41 AM ]
புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 05:51.39 AM ]
வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 31-03-2015, 05:43.11 AM ]
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:39:23 GMT ]
வடகொரியாவிற்கு எதிராக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் இணைந்து கூட்டு போர் ஒத்திகையை நிகழ்த்தியுள்ளன.
[ Tuesday, 31-03-2015 05:33:19 GMT ]
சிங்கப்பூரில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:06:26 GMT ]
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 06:01:08 GMT ]
விண்வெளியில் சூரிய மின் உற்பத்தி மையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:34:44 ] []
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்..