செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றிய 32 வயதான குராம் ஷேக் ஒரு வருடத்துக்கு முன்னர் தங்காலையில் வைத்து, ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதியான சம்பத் சந்திரபுஷ்ப விதானபத்திரன என்பவரால் கொல்லப்பட்டார்.
இதன் பின்னர் அவரும் மேலும் 8 பேரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொலைசெய்யப்பட்டவரின் சகோதரரான நஸார், பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அதிகாரிகள் தமது சகோதரரின் கொலை விடயத்தில் காட்டும் அசமந்த விசாரணை போக்கு கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானிய பிரதமருக்கு அவரது நாட்டில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.