இந்த மாநாடு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சுமந்திரன், அரியநேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படுகிறது.
இதன்போது இலங்கையில் தமிழர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்ற விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில், பிரித்தானியா, இந்தியா, சிங்கப்பூர், கனடா, மியன்மார், ஜப்பான், மொரிசியஸ், புரூனை ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.