செய்தி
யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் காவலுக்கு நின்ற பொலிஸார் திடீரென விலக்கப்பட்டுள்ளனர்!
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:27.30 AM GMT ]
யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடமை புரிந்து வந்த பொலிஸார் திடீரென இன்று காலை முதல் அவ்விடத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கலைப்பீட மாணவர்கள் கூடுவதனை அடுத்தே இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தெரியவருவதாவது:

யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில், விஞ்ஞான பீட வாயில், மாணவர் விடுதிகளின் வாயில்களில் கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் யாழ்ப்பாண பொலிஸார் காவற்கூடுகளை அமைத்து காவல் கடமையில் ஈடுபட்டு வந்தனர்.

பொலிஸாரின் பிரசன்னம் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையிலும், ஒரு மாத காலமாக நிலைகொண்டிருந்த பொலிஸார் இன்று காலை முதல் திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் சுதந்திரமான முறையில் அச்சமின்றி கூட்டத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களின் விடுதலை ஒருபுறமிருக்க, பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதன் மூலமே அவர்களது விடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று துணைவேந்தர் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் கலைப்பீட மாணவர்களும், விரிவுரையாளர்களும் இன்று கூடி ஆராயவிருக்கின்றனர்.

அதேபோலவே விஞ்ஞான பீடத்தினருக்கான சந்திப்பு விஞ்ஞான பீடாதிபதியின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை விஞ்ஞான பீடாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 11:15.14 AM ]
அரசியல் சாசன பேரவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
[ Tuesday, 28-04-2015, 11:12.54 AM ]
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-04-2015, 10:58.32 AM ]
கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர்.
[ Tuesday, 28-04-2015, 10:53.27 AM ]
மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பொதுமக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் டயகம வைத்தியசாலை பல வருடகாலமாக எவ்வித வசதிகள் இன்மையால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் பல இடர்களை சந்திப்பதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
[ Tuesday, 28-04-2015, 10:29.15 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 11:30:12 GMT ]
பிரபல நடிகையும் ரியால்ட்டி ஷோ ஸ்டாருமான கிம் கர்தஷியனின்(Kim kardhashian) வளர்ப்பு தந்தை தான் ஒரு பெண் என பேட்டியளித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 08:57:57 GMT ]
காரைக்காலில் கணவரின் 300 கோடி சொத்துக்களுக்காக மனைவிகள் திட்டமிட்டு நடத்திய கொலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
[ Tuesday, 28-04-2015 08:01:19 GMT ]
அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
[ Tuesday, 28-04-2015 06:57:56 GMT ]
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.