செய்தி
பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில், இந்தியாவிற்கு பயிற்சி அளிக்கத் தயார்: கோத்தபாய
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:33.52 AM GMT ]
பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் இந்திய படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய இராணுவத் தளபதியிடமும் இது தொடர்பில் விளக்கியிருந்தேன்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான அனுபவங்களையும், நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயார்.

இந்திய அரசாங்கம் விரும்பினால் இந்திய படையினருக்கு இந்தப் பயிற்சிகளை வழங்க முடியும்.

இலங்கையிடமிருந்து பயங்கரவாதத் தடுப்புத் தொடர்பில் பயிற்சி பெற்றுக்கொள்வதா என்பதனை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான இலங்கை படையினர், இந்தியாவில் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுக்கொள்கின்றனர்.

அதேபோன்று இந்திய படைவீரர்களுக்கும் இலங்கையில் பயிற்சிகளை வழங்க முடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 25-01-2015, 09:45.38 AM ]
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரத்தை வரவேற்கும் நிகழ்வுகள் இன்று மலையகத்தில் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
[ Sunday, 25-01-2015, 09:42.26 AM ]
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் இன்று காலை மஞ்சள் நிறத்திலான மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.
[ Sunday, 25-01-2015, 09:22.45 AM ]
தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட இடங்களின் அதிகாரத்தை பிடிக்குமாறும் இராணுவம் அவற்றுக்குள் செல்லும் போது எந்த இராணுவப் படைப் பிரிவு என்பதை அடையாளம் காண முடியாதபடி சீருடையில் இருக்கும் பதக்கங்களை அகற்றுமாறும் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
[ Sunday, 25-01-2015, 09:17.10 AM ]
வடமராட்சி, எள்ளங்குளம் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
[ Sunday, 25-01-2015, 09:10.02 AM ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் செய்யத் அல் ஹூசைன் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் வருடந்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
[ Sunday, 25-01-2015 08:19:06 GMT ]
சவுதி அரேபியாவின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் பின் அஜீஸ் அல் சௌத், மறைந்த மன்னரின் கொள்கைகளையே தான் பின்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 25-01-2015 06:32:45 GMT ]
குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 7 பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
[ Sunday, 25-01-2015 06:33:12 GMT ]
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்காவின் உலகக்கிண்ண செயல்பாடு குறித்து மஹேல ஜெயவர்த்தனே கருத்து வெளியிட்டுள்ளார்.
[ Sunday, 25-01-2015 04:28:21 GMT ]
பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.