செய்தி
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: மீன், நண்டுகளையும் பறித்து சென்றனர்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 06:35.16 AM GMT ]
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிங்கள கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

நாகை, இராமேஸ்வரம், வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் மீனவர்களையும் சிறை பிடித்து செல்கிறார்க்ள.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை அழைத்து செல்லப்பட்டனர். நேற்று முன்தினம் தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் நாகை, வேதாரண்யம், இராமேஸ்வரம் காரைக்கால் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகிறார்கள்.

இவர்கள் கோடியக்கரையில் இருந்து 70 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களோடு நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையைச் சேர்ந்த விஜயபாலன் (வயது32), நடராஜன் (50), கண்ணையன் (28), குருசாமி (30), சங்கர் (30), குப்புசாமி (59), சிலம்பரசன் (24), தேவராஜன் (50) ஆகிய 8 மீனவர்களும் 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 8 பேரும் மீன்பிடித்து விட்டு தங்கள் படகுகளில் கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் புதுப்பேட்டை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் விசைப்படகுகளில் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கயிற்றால் தாக்கினர்.

பின்னர் இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டு மிரட்டி, புதுப்பேட்டை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த நீலக்கால் நண்டுகள், மீன்களையும் பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.

இதைத்தொடர்ந்து கோடியக்கரை திரும்பிய 8 மீனவர்களும், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


[ Thursday, 20-06-2013, 07:44.05 AM ]
கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Thursday, 20-06-2013 07:53:04 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ Thursday, 20-06-2013 08:00:51 GMT ]
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.