நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியன மக்கள் வெறுக்கும் நிலையில்...!- ரட்ணசிறி
ஹொரண பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று நாட்டில் பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதற்கு காரணம் தவறான புரிந்துணர்வுகளே ஆகும்.
நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் என்பவற்றை தற்போது மக்கள் வெறுக்கும் நிலையில் உள்ளன.
ஒருவரை கீழ் தள்ளி ஒருவர் மேலே செல்ல முடியாது.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையில் அதிகாரம் உள்ளது.
இவற்றின் சுயாதீனத் தன்மை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
மக்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் அதனை மதிக்க வேண்டும். என்றார்.