செய்தி
பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது! அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:59.42 AM GMT ]
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு நடாத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அமர்வுகளின் மூலமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு தயார் எனவும், எனினும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளின் மூலமாக எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கி வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-04-2015, 03:21.49 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
[ Saturday, 25-04-2015, 02:57.05 AM ]
உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையொன்று குருநாகல், தொடம்கஸ்லந்த புராண ரம்படகல்லை மொனராகல விகாரையில் திரைநீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-04-2015, 02:22.54 AM ]
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 25-04-2015, 02:20.24 AM ]
இலங்கையர்கள் உட்பட்ட அகதிகள், அவுஸ்திரேலியாவினால் கம்போடியாவில் குடியேற்றப்படவுள்ளமையை சீன செய்தித்தாள் ஒன்று கண்டித்துள்ளது.
[ Saturday, 25-04-2015, 02:20.04 AM ]
மீன்பிடித் தடைக்காலம் நீட்டிப்பு, மீனாகுமாரி கமிஷன் அறிக்கை, இலங்கை - தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் இழுபறி... என அடி மேல் அடி விழுந்து நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
[ Friday, 24-04-2015 14:59:25 GMT ]
தொழில்நுட்ப வசதிகளால் நன்கு முன்னேறியுள்ள ஸ்பெயின் நாட்டில் ’சூரியன் தான் பூமியை சுற்றி வருவதாக’ சுமார் 30 சதவிகித மக்கள் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
[ Friday, 24-04-2015 17:15:31 GMT ]
அர்ஜெண்டினாவின் ஆண்டஸ் மலையில் உயிரிழந்த இந்திய வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
[ Saturday, 25-04-2015 03:24:20 GMT ]
பாகிஸ்தானுக்கு எதிராக டுவென்டி–20 போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-04-2015 13:11:12 GMT ]
பாலுடன் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 24-04-2015 07:44:43 ]
உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.