செய்தி
(2ம் இணைப்பு)
Photo
கிழக்கில் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் வீதி விபத்து! இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பலி
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:14.47 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்முனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து கோட்டைக்கல்லாறு புத்தடி கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த விமான படையினரின் கெப் ரக வாகனத்துடனே மோட்டார் சைக்கிள் மோதுண்டு இவ் விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் விமானப்படையினரின் ட்ரக் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு புற்றடி நாகதம்பிரான் ஆலயத்துக்கு முன்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கல்முனையை சேர்ந்த பிரதான வீதியை சேர்ந்த சித்தார் ஜாபத் (46வயது) என்பவரே உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கல்முனையில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்த விமானப்படையின் டரக் வண்டி பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியபோது அவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 06:45.06 AM ]
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Sunday, 26-05-2013, 06:17.29 AM ]
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
[ Sunday, 26-05-2013, 06:07.03 AM ]
கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013, 05:33.29 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

[ Sunday, 26-05-2013, 04:49.59 AM ]
திருகோணமலை, கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Sunday, 26-05-2013 05:36:28 GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:45:57 GMT ]
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
[ Sunday, 26-05-2013 06:44:57 GMT ]
தற்போது தமிழ் திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தெரிவு தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.