செய்தி
 Photo
சர்வதேசம் அங்கிகரிக்கும் தீர்வை நோக்கி, நாம் உறுதியோடு முன்னேற வேண்டும்: சட்டத்தரணி துரைராசசிங்கம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:40.57 AM GMT ]

அடிப்படையில் என்றும் பிறழாத சாத்தியப்படக்கூடிய தீர்வை நோக்கி, அதாவது மூன்றாவது கண்ணெனக் குறிப்பிட்ட சர்வதேசம் அங்கீகரிக்கும் தீர்வை நோக்கி நாம் உறுதியோடு முன்னேற வேண்டும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற அமரர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 7வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமரர் ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி தோன்றிய காலத்தில் இருந்தே அதன் தொண்டனாகப் பணியாற்றத் தொடங்கினார்.

1970 களில் இளைஞர் பேரவை தோற்றம் பெற்ற காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்குகளில் எல்லாம் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.

1989 களில் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்களோடு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு அபேட்சகராக களமிறங்கினார்.

அத்தேர்தலானது, சகலருமறிந்தபடி முறையீனமாக நடைபெற்றதன் காரணமாக தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் ஜோசப் பரராசசிங்கம் ஆகியோர் தோல்வியடைந்தனர். இருப்பினும் அன்றைய சமத்துவமான அரசியல் மாற்றங்களின் காரணமாக ஜோசப் பரராசசிங்கம் பாராளுமன்றத்திலே கால் பதித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களநிலவரத்தைக் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் செயல்பட்டார். அன்று எமது பிரதேசத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில் நடைபெற்ற இராணுவ அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்தினதும் கேள்விக்கு உட்படுத்தினார்.

இதன் காரணமாக 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலே 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். இக்காலப் பகுதியிலும் அவர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதிலும் அதன் மூலம் அரசின் சட்ட மீறல்களை கட்டுப்படுத்துவதிலும் அவர் முதலிடம் வகித்து வந்தார்.

2004 இல் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு அமரர் ஜோசப் பரராசசிங்கத்திற்கு அதிக கிலேசம் அடையச் செய்தது. கள நிலவரத்தை அனுசரித்து அரசியல் நடாத்த வேண்டும் என்ற அவருடைய கொள்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

எனினும் தேசியத்தை இலக்காகக் கொண்டு எதிர் நீச்சலிட அவர் தீர்மானித்தார் அவ்வாறே செயல்பட்டார் இதன்காரணமாக தேர்தலிலே தோல்விகண்டார். எனினும் தமிழ்த் தேசியம் அவருக்குக் கைகொடுத்தது மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2005 ஆம் அண்டு மார்கழி 25ம் திகதியன்று மட்டுநகர் புனித மரியாள் ஆலயத்தில் நள்ளிரவு ஆராதனை முடிவடைந்து நற்பிரசாதம் பெறச்சென்ற அவரை காலனே கால் வைக்க அஞ்சுகின்ற அந்தத் திருக்கோவிலில் கால்வைத்த காதகர்களால் அவர் காவுகொள்ளப்பட்டார்.

இன்று அந்த 7வது நினைவு நாளை அனுஸ்டிக்கின்றோம். எனவே அவர் காட்டிச் சென்ற பாதையை கருத்தில்கொண்டு அவர்வழி நடந்துசெல்ல உறுதிபூணவேண்டும் நாம். ஒரு காலத்தில் முழு இலங்கையின் அரசியல் தன்மையும் தமிழ் தலைவர்களின் வழிகாட்டலிலேயே தங்கி நின்றது.

சேர் பொன். ராமநாதன் அவர்களின் அரசியல் தலமையை முழு இலங்கையும் ஏற்றது இலங்கையின் மக்கள் அமைப்புக்குள் ஏற்ற விதத்தில் இன விகிதாசார நிலமை பேணப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தபோது இலங்கை எனும் தேசியம் பிளவுபடத் தொடங்கியது.

அவருக்குப் பின்னே வந்த சேர் பொன்.அருணாச்சலம் அவர்களையும் அவரால் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரசையும் இலங்கையர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்ட போதிலும் இங்கும் இன அடிப்படையில் அரசியல் முறைமை பின்தள்ளப்பட்டது.

1936 இலே தனிச்சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டு தமிழ் பேசும் சிறுபாண்மை மக்களுக்கு சவால் விடுக்கப்பட்டது. இதன்காரணமாகத்தான் இலங்கைச் சிறுபாண்மை மக்கள் அனைவரினதும் பாதுகாப்புக் கருதி 50 இற்கு 50 கோரிக்கை தமிழ் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது.

அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அதன் அடிப்படையிலேயே அன்று ஆக்கப்பட்ட அரசியல் அமைப்பில் சிறுபான்மை மக்களுக்கான சில பாதுபாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டு உறுப்புரை 29 இதற்கு வழிவகை செய்தது.

இருப்பினும், சிங்கள தலமை இவற்றை அலட்சியம் செய்ததால் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை குடியுரிமைச் சட்டத்தால் 10 லெட்சத்திற்கும் மேற்பட்ட மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1949 ஆம் அண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தினால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டன.

இவையெல்லாம் இன்றைய தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஓரம் கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளாகும். இதன் காரணமாகத்தான் பாராளுமன்றத்தில் நலிவடைந்து செல்கின்ற சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவம் அபாயகரமான ஒரு நிலமைக்குத் தள்ளிவிடும் என்பதனால் அரசியல் விற்பன்னர்களால் சிறுபாண்மை மக்களையும் அவர்களின் இயல்புநிலை சோராத வகையில் அரசியல் மயப்படுத்துவதற்கான மாநில சுயாட்சியென்று சொல்லப்படும் சமஸ்டி முறையில் நடாத்திச் செல்ல தந்தை செல்வா களம் அமைத்தார்.

இதற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய அமோக ஆதரவினை அடிப்படையாகக் கொண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் லட்டி செல்வா ஒப்பந்தம் என்பவற்றின் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தாத அரசியல் முறைமைகளுள் சிங்கள தலைவர்களை தந்தை செல்வா அழைத்தார்.

ஆனால் சிங்கள தலமையோ அரசியல் முறைமைகளை புறந்தள்ளி மகாவம்சத்தை கையில் எடுத்தமையால் நாட்டின் பன்மைத்துவத்தை முற்றாக அலட்சியம் செய்தனர். இதன் காரணமாக இளைஞர்கள் வோறொரு மார்க்கத்தில் சுயாட்சி இலக்கை அடைய உளங்கொண்டு செயற்பட்டனர்.

தமிழின் செழுமையை பாராட்டிப் புகழ்ந்திடும் தமிழாராட்சி மாநாட்டைக் கூட தமிழர் தம் விருப்பப்படி நடாத்தி முடிக்க சிங்களத் தலைமை ஒற்றுமைப்படவில்லை.

இதனால் யாழில் நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டிப்போது மின்கம்பிகளுக்கு வேட்டுவைத்து மக்களைப் பீதியடையச் செய்து அவர்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஓடி மின்சாரம் பாய்ந்து ஏழு உயிர்கள் வன்கொலை செய்யப்பட காரணமாய் அமைந்தார்கள்.

இத்தகைய அக்கிரமச் செயல்களின் காரணமாக தற்காப்பு என்ற சட்ட முறைமையின் அடிப்படையில் எழுந்ததே ஆயுதப் போராட்டமாகும். இதனை சர்வதேச சட்ட முறைமைகளை மீறிய சர்வதேசம் சார்ந்த கொடும் கரங்கள் முழு மனிதாபிமானத்தையும் புறந்தள்ளி ஒடுக்கிவிட்டன.

முள்ளிவாய்க்காலிலேயே மிகப்பெரிய படுபாதகம் அரங்கேற்றப்பட்டது. இருந்தாலும் தமிழர் தம் உரிமை உணர்வு சாகடிக்கப்பட முடியாதது. இப்பொழுது குற்றம் இழைத்த அத்தனை பேரும் தங்கள் குறுகுறுக்கும் மனத்திற்கு பதில் சொல்லவேண்டிய இராஜதந்திர பயணத்திலே நாம் கால்பதித்துள்ளோம்.

எனவே எம்மை பழைய முத்திரையைக் குத்தி புறந்தள்ளுகின்ற சதிமுயற்சிகளில் இருந்து காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

நீதி என்பது மூன்றாவது கண்ணால் பார்க்கப்படும் ஒன்று என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த மூன்றாவது கண் அங்கிகரிக்கக்கூடிய சட்டமுறை சார்ந்த நடவடிக்கை மூலமான முன்னெடுப்புக்களே எமது விடிவிற்கான மார்க்கம் என்பதனை நாம் மறந்துவிடலாகாது.

புலத்தில் வாழும் மக்களுக்கான தீர்வை நோக்கி நாம் நடக்கவேண்டும் இது புலம்பெயர்ந்து வாழும் எமது உடன் பிறப்புக்களின் ஆதங்கங்களைப் புரிந்துகொள்ளாத ஒரு நடைமுறையல்ல.

அவர்களும் எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையில் என்றும் பிறழாத சாத்தியப்படக்கூடிய தீர்வை நோக்கி அதாவது மூன்றாவது கண்ணெனக் குறிப்பிட்ட சர்வதேசம் அங்கீகரிக்கும் தீர்வை நோக்கி நாம் உறுதியோடு முன்னேற வேண்டும்.

இதற்கு தலைமையின்பால் நம்பிக்கையும் விளக்கக் குறைபாடான இடங்களில் தலைமையை அணுகி தெளிவுபெறும் பண்பும் வளர்க்கப்பட வேண்டும்.

தலைமை என்பது ஒன்றே கூட்டுத் தலைமை என்பது உதர்க்கமான வாசகம் எனவே ஒரே தலைமையின் கீழே வேண்டுமென்றால் உள்ளக விமர்சனங்களோடு இராஜதந்திர முயற்சி மூலமான விடுதலையை நோக்கி பயணிப்பதே அமரர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-09-2014, 03:12.57 PM ]
ஊவா தேர்தலில் தமது கட்சிக்குக் கிடைத்த 45,000 வாக்குகளைத் திருடி அரசாங்கம் மோசடி செய்திருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
[ Monday, 22-09-2014, 02:34.21 PM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட ஹரீன் பெர்னாண்டோ மீது, குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
[ Monday, 22-09-2014, 01:55.44 PM ]
இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தனியான நாட்டை அமைப்பதற்கான குறிக்கோள்களை கொண்டிருக்கவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
[ Monday, 22-09-2014, 01:35.19 PM ]
குருஷேத்திரப் போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக எத்தனையோ அறிகுறிகள் தெரிவிக்கப்பட்டன. பாண்டவர்களுக்கும் உரிமை கொடுத்தால் கெளரவர்கள் கெளரவமாக வாழலாம் என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட்டன.
[ Monday, 22-09-2014, 01:34.18 PM ]
இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளது.
[ Monday, 22-09-2014 12:05:55 GMT ]
ரஷ்யாவில் நபர் ஒருவர் லொறி மற்றும் காரினால் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 22-09-2014 09:24:25 GMT ]
சண்டிகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 22-09-2014 07:18:33 GMT ]
ஆசிய விளையாட்டின் ஹொக்கி போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய ஹொக்கி அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
[ Monday, 22-09-2014 07:33:26 GMT ]
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம், பருவப் பெண்களே மூக்குத்தி அணிவர்.
[ Monday, 22-09-2014 07:42:15 GMT ]
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் படம் அனேகன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 22-09-2014 05:44:00 ] []
தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 30 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.