செய்தி
(2ம் இணைப்பு)
 
கைதாகியுள்ள 100 சீனர்களை விசாரிக்க அந்நாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் இலங்கை வந்துள்ளது
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:48.17 AM GMT ]
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 100 க்கு மேற்பட்ட சீனப் பிரஜைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அந்நாட்டு குற்றத் தடுப்புப் பொலிஸ் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. 

சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையிலேயே இந்தக் குழு இலங்கை வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைத் தளமாக வைத்து இணைய வலையமைப்பின் ஊடாகக் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சீனர்களில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சிலரும் காணப்படுகின்றனர்.

இவர்களை விசாரணை செய்யவே சீனாவின் குற்றத் தடுப்புப் பொலிஸ் குழு இங்கு வந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜைகளை அந்நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக சீனாவிலிருந்து மேலும் ஒரு குழு இலங்கை வந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் மோசடி செய்த 100 சீனர்களை நாடு கடத்தத் தீர்மானம்

இணையத்தின் ஊடாக மோசடிகளில் ஈடுபட்ட 100 சீனர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணையத்தின் ஊடாக மோசடிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து 100 சீனர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த சீனர்கள் இன்று நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட வேண்டிய விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக சீனப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சீனர்களை நாடு கடத்துமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு, கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

இணையத்தின் ஊடாக சீன வங்கிக் கணக்குகளில் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 12-02-2016, 07:33.56 AM ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ அரசியல் அனாதையாக மாறியுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
[ Friday, 12-02-2016, 07:18.49 AM ]
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, இது விடயம் சம்பந்தமாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
[ Friday, 12-02-2016, 07:08.35 AM ]
கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அணியின் புதிய கட்சி உருவாக்கம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Friday, 12-02-2016, 07:05.11 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க நாட்டு தூதரகத்தின் பிரதித் தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
[ Friday, 12-02-2016, 06:51.52 AM ]
இலங்கையைச் சேர்ந்த இளம் வாலிபர்களை துஷ்பிரயோகம் செய்து வந்த வெளிநாட்டு முதியவர் ஒருவர் நேற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 12-02-2016 06:15:20 GMT ]
மெக்சிகோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 12-02-2016 05:29:09 GMT ]
இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையராக ஹரிந்தர் சித்து என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 12-02-2016 07:20:40 GMT ]
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.
[ Thursday, 11-02-2016 13:50:23 GMT ]
மட்டன், சிக்கன் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கடல்வகை உணவுளை சாப்பிடுவதில் கவனம் கொள்ளுங்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.