செய்தி
ஈரானிய கப்பலொன்று இலங்கையில் தடுத்து வைப்பு
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 11:23.37 AM GMT ]

ஈரானிய கப்பல் கம்பனி ஒன்றின் கப்பலை இலங்கை அதிகாரிகள் கடந்த 14ம் திகதியிலிருந்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனிய வங்கியிலிருந்து 250 மில்லியன் யூரோ கடன் பெற்று வாங்கப்பட்ட எம்.வி சியர் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்ட இக்கப்பல், வங்கிக்குரிய கடன் பணத்தை கட்டவில்லை எனவும் அத்துடன், கப்பலின் பெயர் சட்டவிரோதமாக எம்.வி அமினா என மாற்றப்பட்டுள்ளதையடுத்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பலில் 8 இந்தியர்களும்,16 ஈரானியர்களும் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். எனினும் கப்பலில் வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்டதால், வேலை செய்ய விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பாக, இந்திய கப்பல் துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் இந்திய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் சீனாவிலிருந்து கடந்த நவம்பர் 18ம் திகதி புறப்பட்டு வந்து காலி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டு நின்றபோதே அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 02-08-2015, 02:10.21 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பு நாட்டை அழிக்க முயற்சிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 01:46.37 AM ]
அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 01:44.28 AM ]
கூக்குரல் எழுப்பப்படும் என்ற அச்சம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் ஏறுவதற்கு தயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 02-08-2015, 01:42.56 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 01:21.09 AM ]
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்யும் முயற்சிகள் இப்போதிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 02-08-2015 00:19:31 GMT ]
நியூசிலாந்தில் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்தவரை சரியான நேரத்தில் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 01-08-2015 14:29:01 GMT ]
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரான பாஜக பிரமுகர் ஜெயசீலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Saturday, 01-08-2015 13:01:41 GMT ]
பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது தொடர்பாக முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-08-2015 15:49:10 GMT ]
எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை மூட்டுத் தேய்மானம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 01-08-2015 18:48:07 ]
இலங்கையில் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலானது, தற்போது மிக விறுவிறுப்பான கட்டத்தினை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வழமையான தேர்தல் பிரச்சார நுட்பமாக இருக்ககூடிய விடுதலைபுலிகள், இத்தேர்தலிலும் உயிர்பெற்று வந்திருக்கிறார்கள்.