செய்தி
(2ம் இணைப்பு)
 
கொக்காவில் முகாம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழ் வைத்தியர் மீது தீவிர விசாரணை
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:04.42 PM GMT ]
கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதியை விடுவிக்க வலியுறுத்தியதற்காக கைதுசெய்யப்பட்ட அனுராதபுரம் சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ந்தும் பொலிஸாரின் தீவிர விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் யுவதியொருவர் கடந்த 29ம் திகதி க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுவதற்காக லீவு பெற்று வீட்டிற்கு சென்றிருந்தார்.

பரீட்சை முடிந்த பின்னர் குறித்த யுவதி மீண்டும் படையில் இணைந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததன் பேரில்  பெற்றோர் அவரைக்கூட்டிக்கொண்டு இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர் தம்முடன் குறித்த வைத்தியரை உதவியாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு வைத்தியர், பெற்றோரின் சார்பில் குறித்த மாணவியை விடுவிக்குமாறு இராணுவத்தினரிடம் கூறியுள்ளார்.

எனினும் அதனைப் பொருட்படுத்தாத படையினர், அவர் ஒலிப்பதிவு கருவி வைத்திருந்தார் எனவும் படையினரின் அனுமதியின்றி பெற்றோருடன் வந்தார் எனவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்து 6 மணிநேரம் படைமுகாமில் வைத்திருந்துள்ளனர்.

அதன் பின்பே மாங்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குறித்த வைத்தியர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த வைத்தியரை விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

தொடர்புபட்ட செய்தி

யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தினரால் கைது?


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 02:39.52 AM ]
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 02:20.52 AM ]
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 02:18.47 AM ]

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:14.38 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 02:32:15 GMT ]
வனத்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் கலாபவன் மணி பொலிசில் சரணடைந்தார்.
[ Saturday, 25-05-2013 03:15:09 GMT ]
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.