செய்தி
நிறைவுக்கு வந்தது யாழ்.தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம்!
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:13.57 PM GMT ]

யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவந்த நிலையில், இன்று மாலை 3 மணியுடன் அப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி, பருத்தித்துறை ஆகிய தனியார் பஸ்களுக்கு இடையில் நேற்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது அச்சுவேலி பஸ் நடத்துனர் சின்னையா பார்த்தீபன் (வயது 28) என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டநிலையில், அவர் படுகாயமடைந்து யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று தனியார் போக்குவரத்து பேருந்துகள் மாவட்டத்தில் உள்ளக ரீதியாக மேற்கொள்ளும் சேவைகள் அனைத்தும் முடங்கின.

இதனால் யாழ். நகரில் புத்தாண்டு கொள்வனவுக்கா வந்திருந்த பெருமளவு மக்கள் போக்குவரத்த இடையூறுகளை எதிர்கொண்ட நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாவட்டச் செயலர் மற்றும் இலங்கை தனியோர் சிற்றூர்திச் சங்கத்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்தில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென வழங்கப்பட்ட உறுதி மொழியையடுத்து இன்று மாலை 3 மணியுடன் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-06-2015, 02:41.49 PM ]
வடக்கில் போதைவஸ்து பாவனை திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்படுவதாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Tuesday, 02-06-2015, 02:28.41 PM ]
அரசியல் அமைப்பு சபைக்கு முன் பாரிய சவால்கள் உள்ளமையால், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மிகவும் பொருத்தமான ஆட்களை நியமிக்க வேண்டு;ம் என்று சர்வவோதயத்தின் தலைவர் ஏ.டி.ஆரியரட்ன கோரியுள்ளார்.
[ Tuesday, 02-06-2015, 02:20.50 PM ]
பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்பலாம் என்ற உத்தரவாதத்தின்கீழ் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை இலங்கைக்கு திரும்புமாறு அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது.
[ Tuesday, 02-06-2015, 12:46.29 PM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 02-06-2015, 12:27.01 PM ]
பொத்துவில் பிரதான வீதியில் உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 02-06-2015 08:26:33 GMT ]
மியான்மர் நாட்டில் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்யா சிறுபான்மையின மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்தங்கள் என அமெரிக்க அதிபரான ஒபாமா அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார்.
[ Tuesday, 02-06-2015 07:45:00 GMT ]
பிரபல நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், அதிகமான ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
[ Tuesday, 02-06-2015 12:13:25 GMT ]
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி இகினா ஷாய்க்கை விட்டுபிரிந்த நிலையில், தனது ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் செலவிடுகிறார்.
[ Tuesday, 02-06-2015 13:56:18 GMT ]
முளைகட்டிய உணவுகளை தினமும் ஏதேனும் ஓர் உணவில் எடுத்துக்கொள்வது உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 02-06-2015 00:47:45 ] []
கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது.