செய்தி
வன்னி தமிழ் பெண்களின் துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பாரதூரமானது! ஜமமு. எஸ். பாஸ்கரா
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:47.29 AM GMT ]
புதுடில்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து மரணமான இந்திய பெண் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

புதுடில்லி பெண்ணின் பாலியல் வல்லுறவு கொலை தொடர்பாக, ஐதேகவின் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர்களின் பிரதான பங்குபற்றலில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெறப்பட்ட கையெழுத்து மனு இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

மாநகரசபை முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சி தலைவர் மனோ கணேசன் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் நமது கட்சி உறுப்பினர்கள் எவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் நிலைமையும், தகைமையும் நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை.

இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பல மடங்கு பாரதூரமானதாகும் என்பது எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக இன்று வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர்.

நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதி முகாம்களில் அடைப்பட்டிருந்த போதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்திக்கின்றனர். இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.

எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது.

நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐதேக பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஐதேகவினருக்கு நாம் எடுத்து கூறியுள்ளோம்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 29-07-2015, 12:23.15 AM ]
தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 29-07-2015, 12:05.54 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சரியானதே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-07-2015, 09:14.56 PM ]
இலங்கையில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-07-2015, 08:22.24 PM ]
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
[ Tuesday, 28-07-2015, 06:50.08 PM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் அன்று மேல்மாகாணத்தில் உள்ள நீர்கொழும்பு, சிலாபம் போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று சிங்களவர்களாக போனதைப்போன்று இன்று இந்த நாட்டில் உள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் சிங்களவர்களாகப் போயிருப்பார்கள்.
[ Tuesday, 28-07-2015 09:59:30 GMT ]
உள்நாட்டு போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக லிபியா நாட்டின் முன்னாள் அதிபரான முயம்மர் கடாபியின் மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
[ Tuesday, 28-07-2015 10:37:54 GMT ]
அப்துல் கலாம் மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகத்தினர் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
[ Tuesday, 28-07-2015 13:28:30 GMT ]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 28-07-2015 05:05:01 GMT ]
ஹேம் பிரியர்களை வெகுவாகக் கொள்ளைகொண்ட Castle ஹேம் ஆனது புத்தம் புதிய பொலிவில் சோனியின் PlayStation 4 இல் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-07-2015 08:51:57 ] []
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.