செய்தி
இலங்கையை பொறுத்தவரை ஏமாற்றம் மிக்க ஆண்டாக கடந்துபோகும் 2012
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 03:55.35 PM GMT ]
கடந்துபோன 2012 ம் ஆண்டு இலங்கையை பொறுத்தவரை பல வகைகளிலும் ஒரு ஏமாற்றம் மிக்க ஆண்டாகவே கடந்து போயிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், சிலோன் ருடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார்.

போரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானம் ஒரு உந்து சக்தியாகப் பார்க்கப்பட்டாலும், அதனையடுத்து பெரிய அளவில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் தென்பகுதி அரசியலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் பலமிழந்த நிலையில், ஒரு தனிநபர் ஆட்சியே அங்கு நடக்கிறது என்ற நிலைமையே தொடர்வதாகவும் அனந்த் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக நீதித்துறைக்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இலங்கையில் ஒரு ''அரபுவசந்தத்தை'' ஒத்த நிலையை ஏற்படுத்திவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே 2012 இல் இலங்கையில் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்திருப்பதாகவும், அதில் கல்வித்துறை போராட்டம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டங்களுக்கு இலங்கையின் பொருளாதார நிலையே அடிப்படைக் காரணம் என்றும் அனந்த் பாலகிட்ணர் கூறுகிறார்.

அதேவேளை தமது பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-04-2015, 07:43.57 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.
[ Sunday, 26-04-2015, 07:43.11 AM ]
பொதுத்தேர்தல் ஜுன் மாதம் இடம்பெறுவது உறுதி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 26-04-2015, 07:26.53 AM ]
கொழும்பு, வெள்ளவத்தை நகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
[ Sunday, 26-04-2015, 07:25.57 AM ]
பிரவுண் சுகர் ரக ஹெரோயின் போதைப்பொருளுடன், வெலே சுதாவின் பிரதான சகா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 26-04-2015, 07:12.07 AM ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
[ Sunday, 26-04-2015 06:42:09 GMT ]
பிரேசில் நாட்டில் திருநங்கை ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த பொலிசாருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[ Sunday, 26-04-2015 06:58:22 GMT ]
கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
[ Sunday, 26-04-2015 05:59:30 GMT ]
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பஞ்சாப்பை வீழ்த்தியதைத் தொடர்ந்து அணித்தலைவர் டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.
[ Sunday, 26-04-2015 06:52:54 GMT ]
நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகள் என்றால் அதை தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 26-04-2015 02:56:58 ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவடைவதற்கு முதல்நாளான கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.