செய்தி
இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 04:11.52 PM GMT ]
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது கோரிக்கையை வலியுறுத்தி தாம், மிச்செய்ல் ஒபாமாவுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கையின் வடக்குகி ழக்கில், சுமார் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் போரின் போது தமது கணவர்களை இழந்துள்ளனர்.

வறுமை, மற்றும் உதவிகள் இன்றி ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் உள்ளனர்.

இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

தமது பிள்ளைகளுக்கு உரிய கல்வி வசதிகளை செய்து கொடுப்பதில் தமிழ்ப் பெண்கள் சிரமங்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே அவர்களின் விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு நியாயம் தேடிக் கொடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரியுள்ளது.

அத்துடன், தமிழப்பெண்களிடம் உணவுக்காக காமத்தை கோரும் அளவுக்கு இலங்கைப் படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் போரின்போது பெண்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டனர் என்று அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன், கடந்த காலத்தில் வெளியிட்ட அறிக்கையையும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-07-2015, 12:29.44 PM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் இன்று மெதமுலனவுக்கு சென்ற அரசியல்வாதிகள் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எவரும் இடம்பெறவில்லை.
[ Wednesday, 01-07-2015, 12:20.34 PM ]
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு ஒரு கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டால், மகிந்த ராஜபக்ச தரப்பு குறிப்பிடத்தக்களவு பின்னடைவை சந்திப்பது நிச்சயம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015, 12:05.05 PM ]
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் போட்டியிடுவதற்கு பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.
[ Wednesday, 01-07-2015, 11:58.15 AM ]
வலிகாமம் கல்வி வலயத்தின் பல பாடசாலைகளின் அதிபர்களுக்கு நாளை முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 01-07-2015, 11:39.38 AM ]
தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-07-2015 08:48:04 GMT ]
ஒளி உமிழும் மர்ம பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-07-2015 07:50:49 GMT ]
இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது குற்றம் இல்லை என சட்டம் கொண்டவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015 07:36:03 GMT ]
கோஹ்லி, டோனி இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இது பற்றி இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015 09:20:30 GMT ]
தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து(Sperm) செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள கருவுடன் (Egg) இணைந்து கரு முட்டை உருவாகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 30-06-2015 23:10:08 ] []
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இசையை மூச்சாக கொண்டவர் என இசையமைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.