கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுவருடத்திற்காக தேவாலயத்தை அலங்காரம் செய்யும்போது இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கலிஸ்தயான் ( வயது23) என்ற இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞரை கத்தியால் குத்தியது 15வயது சிறுவன்.
இந்நிலையில் குறித்த சிறுவனை கைதுசெய்த பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தபோது சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சிறுவன் 3 பாடசாலைகளில் மாற்றி மாற்றி சேர்க்கப்பட்டு 3 பாடசாலைகளிலிருந்தும் ஒழுக்க குறைபாடு காரணமாக விலக்கப்பட்டிருக்கின்றார்.
இது மட்டுமல்லாமல் போதைப்பொருள் பாவனைக்காக பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுமுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
யாழ்.பாசையூரில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்: ஒருவர் பலி