செய்தி
 Photo
இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவிலிருந்த இராணுவப் பிரிகேடியர் கனடாவிற்கு விஜயம்?
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 06:06.18 PM GMT ]

2001ம் ஆண்டு முதல் வவுனியாவின் இராணுவத் தளபதியாகவும் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பிரதான பங்கை வகித்தவருமான பிரிகேடியர் ரவி ரட்ணசிங்கம் கனடா, அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் தொகை 80,000 எட்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அவை இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டதென்றும் குற்றஞ்சாட்டுக்கள் எழும் இந்தவேளையில், மேற்படி யுத்தத்தில் பணியாற்றிய ஒரு பிரதான தளபதி போர்க்குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து அமெரிக்கா, கனடாவிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டது பலரதும் புருவத்தை உயர வைத்துள்ளது.

போரின் பின்னர் கிளிநொச்சியில் புனர்நிர்மாணப் பணிகளையும் மேற்பார்வை செய்துவரும் பிரிகேடியர் ரவி ரட்ணசிங்கம், கனடாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களின் உதவியுடன் பெற்றோரற்ற குழந்தைகளிற்கான இல்லமொன்றைப் புனரமைப்புச் செய்வதில் முன்னின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இராணுவப் பிரிகேடியர் 2011ம் மற்றம் 2012ம் ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பல மகாநாடுகளில் கலந்து கொண்டவர் என்பதோடு, குறிப்பாக தென்கொரியா, உகண்டா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இராணுவ மற்றும் பாதுகாப்புப் படை மாநாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

www.canadamirror.com


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 10:55.38 AM ]

கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 10:32.38 AM ]
தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 20-06-2013, 10:04.53 AM ]
சிறீலங்கா அணிக்கு எதிரான பிரித்தானிய மக்களின் போராட்டம் நேரலையாக இன்று காலை10 மணி முதல் நடைபெற்று வருகின்று.
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:38:49 GMT ]
அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Thursday, 20-06-2013 10:53:54 GMT ]
இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 10:30:19 GMT ]
இலங்கை அணி ஒட்டுமொத்தமாக ஓர் ஆபத்தான அணி என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013 09:20:27 GMT ]
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.
[ Thursday, 20-06-2013 10:47:42 GMT ]
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.