செய்தி
(2ம் இணைப்பு)
Photo
பரந்தனில் இரு இளைஞர் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்!- இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்ட பொலிஸார்!
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:30.03 PM GMT ]

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது பொலிசார் மிகமோசமாக கூட்டாக தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக பரந்தன் பகுதியில் பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் குகராசா, உபதவிசாளர் நகுலேஸ்வரன் உட்பட பிரதேசசபை மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை கேட்டறிந்துள்ளனர்.

தாக்கப்பட்ட இளைஞர்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு-

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், குறித்த தாக்குதலுக்கு பொலிஸார் மன்னிப்பு கோரியிருக்கின்றனர்.

இன்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வட்டக்கச்சியை சேர்ந்த வி.விஜயரூபன் (வயது26),ஆ.லோகேஸ்வரன் (வயது24) ஆகிய இரு இளைஞர்களையு
ம் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

எனினும், சடுதியாக நிறுத்த முடியாமையினால் குறித்த இளைஞர்கள் இருவரும் தமது வாகனத்தை சற்று தள்ளி கொண்டு சென்று நிறுத்தியிருக்கின்றனர். இதற்கிடையில் குறித்த இளைஞர்கள் இருவர் மீதும் பாய்ந்த போக்குவரத்துப் பொலிஸார் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸாருடன் தர்க்கப்படவே குறித்த இளைஞர்கள் இருவரும் தம்மை தாக்கியதாக பொலிஸார் பெல்டி அடித்துள்ளனர். இதன் பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சென்றிருந்தார்.

இந்நிலையில் விடயம் பெரிதாக்கப்படப் போகின்றது என்ற அச்சத்தில் பொலிஸார் சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர்களை விடுதலை செய்திருக்கின்றனர்.

இதேவேளை பரந்தன் சந்தியில் இன்று நடைபெற்ற இந்தச்சம்பவம் 5வது சம்பவமாகும், இதற்கு முன்னரும் படையினர், பொலிஸார் இணைந்து பல தடவை மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 05:27.29 AM ]

கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  இந்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:58:11 GMT ]
கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.