சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நிரோசா பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
260 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண்ணை தெஹிவளை பொலிஸார், கல்கிஸ்ஸ நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இதன் போது தாம் ஒருபோதும் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தியதில்லை, வைத்திருக்கவும் இல்லை என குறித்த பெண் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார், தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று ஆடைகளைக் களைந்து கடும் தாக்குதல் நடத்தியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண் மீது தாக்குதல் நடத்த யார் அதிகாரம் வழங்கியது என நீதவான் நிரோசா பெர்னாண்டோ பொலிஸாரிடம் வினவியுள்ளார்.
பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் மக்களுக்கு நீதி கிடைக்குமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.