செய்தி
உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 12:53.28 AM GMT ]
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது.

மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில்,

உலகம் நாளை (இன்று) அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.

அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.

இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை.

இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 04-09-2015, 05:13.27 AM ]
ஒன்றாரியோ மாகாணத்தின் புரோகிரசிவ் கண்சவேட்டி கட்சியின் தலைவராக அமோகமாகத் தெரிவு செய்யப்பட்டவரும், தமிழர்களின் இதயங் கவர்ந்த நாயகனாகவும் திகழும் திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் இன்று இடம்பெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டசபையில் உறுப்பினரானார்.
[ Friday, 04-09-2015, 04:54.42 AM ]
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
[ Friday, 04-09-2015, 04:28.00 AM ]
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவை மேலும் வலுவடைய செய்வதற்கும் உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கும் எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
[ Friday, 04-09-2015, 04:11.42 AM ]
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டைவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவுகொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது.
[ Friday, 04-09-2015, 03:26.20 AM ]
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா இடம்பெறும் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
[ Friday, 04-09-2015 00:17:59 GMT ]
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் பரவிய விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட 300க்கு மேற்பட்ட சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்
[ Thursday, 03-09-2015 15:26:00 GMT ]
ஒகேனக்கல் பரிசல் விபத்தில் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ள பத்து மாத குழந்தையின் சடலம் பார்ப்போரின் நெஞ்சை நடுநடுங்க வைக்கிறது.
[ Friday, 04-09-2015 05:27:47 GMT ]
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்ததையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து பதவி விலகியுள்ளார்.
[ Thursday, 03-09-2015 13:43:22 GMT ]
வயதானவர்கள் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 02-09-2015 18:16:29 ] []
இலங்கை வரலாற்றிலே புதிய சக்தி பாய்ச்சப்பட்டுள்ள ஒரு பாராளுமன்றமாக 8வது பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இடம்பெற்ற முதலாவது அமர்விலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், உறுதியான ஒரு எதிர் கட்சியின் தேவையினை மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.