செய்தி
யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 03:18.16 AM GMT ]

யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும், போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 29-05-2015, 07:12.38 AM ]
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 29-05-2015, 07:09.56 AM ]
விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 29-05-2015, 06:33.15 AM ]
பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன்ஸ் டய்யூறிஸ் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.
[ Friday, 29-05-2015, 06:33.05 AM ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் மூளை அச்சாறுவாக மாறியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 29-05-2015, 06:22.39 AM ]
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் நடந்தவண்ணம் உள்ளன.
[ Friday, 29-05-2015 07:15:13 GMT ]
சீனாவில் 26 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
[ Friday, 29-05-2015 06:43:58 GMT ]
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரியுள்ளார்.
[ Friday, 29-05-2015 07:54:28 GMT ]
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
[ Friday, 29-05-2015 07:38:45 GMT ]
அதிக நேரம் தூங்கினால் பக்கவாதம் வரும் அபாயம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 28-05-2015 17:26:32 ]
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது.